கோடலின் தம் வினைக்கு இயலும் எழுத்து - கள் என்பது பொருந்துமாறில்லை. (பக்-19)17 |
சூ. 64:ஈற்ற என்றது வகைய என்றவாறு. இரு ஈற்றும் உரித்தே (சூ-24) என்பதனால் ஈறு-வகை என்னும் பொருட்டாதலை அறிக என்கின்றார். இரு ஈற்றும் என்பது பொருந்தாப் பிரிப்பு. அஃது ஈரீற்றும் என்றே புணரும். இருவீற்றும் என்பதே நேரிய சொற்றொடர். "விளியென்னும் வீற்ற" எனப்பாடங்கோடலே தக்கது எனத் தோன்றுகின்றது. |
இயற்கைப்பொருளைச் செயற்கைப் பொருளாகக் கூறுதல் தமிழ் மரபன்று (பக்-91) "நின்றசொல் முன் இயல்பாகும்மே" "பன்னீருயிரும் மொழிதலாகும்" இயற்கை நிலையை இயல்பு ஆகும் என்பதும் இயல்பாக மொழி முதற்கண்வரும் எழுத்தை மொழிமுதலாகும் என்பதும், தமிழிலும் இயற்கைப் பொருளைச் செயற்கையாகக் கூறும் மரபுண்மையைப் புலப்படுத்தும். "இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத்தியற்கை" என்பது செயற்கையை இயற்கையாகக் கூறும் செய்திக்கு எடுத்துக்காட்டு. (சூ. 67, 69, 74 கொள்க) |
இன், ஆன், ஏது-இன்னும் ஆனும் ஆகிய மாற்றுருபு ஏற்று ஏதுப்பொருளில் வருவன என்பது இவர்கருத்து. இதனைப் பல இடங்களிலும் எடுத்துக் கூறிவற்புறுத்தல் இவ்வாசிரியர் மதம் என்று கோடும். |
இன் உருபு ஐந்தன் உருபு. அதனைப் போன்ற 'இன் என்பதனை மூன்றன் மாற்றுருபாகக் கோடல் மயங்கக் கூறலாகாதா? அதனின் இயறல் முதலிய தொடர்களில் 'இன்' சாரியையாக ஆன் என்ற உருபு தொக்கதாகக் கோடல் பொருந்துமா என்பதை நோக்குதல் வேண்டும். அதனினான் என்பதே அதனின் என உருபு தொக்குவந்ததாகலாம். அதனினியறல் முதலியவற்றை விரிக்குமிடத்து அதனான் இயறல் அதனான் ஆதல் என்றே உரையாளர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. |
|
17. "கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே" என்பதனானும், "தம் வினைக் கியலும் எழுத்து, என்பதனானும் இங்ஙனம் உரைகொள்ளப்பட்டது. தூமலர்க்கண்கள் அமைந்தன [பரி-7,52] பொன்மெலியும் மேனியாள், பூஞ்சுணங்கு மென் முலைகள் [திணைமாலை-21] கள்ளீறுபெற்று வருதல் சான்றோர் வழக்கிலுண்டு. |