246வினையியல்

எ-டு :யான் வாழ்க, யாம்  வாழ்க, நீ  வாழ்க,  நீயிர்  வாழ்க, அவன்
வாழ்க,   அவள்   வாழ்க,   அவர்  வாழ்க, அது வாழ்க, அவை  வாழ்க
எனவரும்.  "பேரமர்   உண்கண் இவளினும் பிரிக" இது தன்மை. "கடாவுக
பாகநின்  கால்வல்   நெடுந்தேர்"   இது முன்னிலை. "கொடாமை வல்லர்
ஆகுக", இது படர்க்கை. எனவரும்.
 

மெலிகோல் செய்தேனாகுக (புறம் - 71) குடிபழி தூற்றங் கோலேனாகுக
(புறம்-72) எனத்தன்மைக்கண்  வந்த  வியங்கோள் படர்க்கைச் சொல்லாயே
நிற்குமாறும்  -  பழைய   உரையாசிரியர்   படர்க்கையாகவே    பொருள்
கூறியுள்ளவாறும் கண்டு கொள்க. இவை எல்லாம்  சான்றோர் செய்யுளாதல்
அறிக. பிறவும்  நல்லிசைப்    புலவோர்    இலக்கியத்துட்   மூவிடத்தும்
வியங்கோள் பயின்று வருமாறுங் கண்டு தெளிக.
 

வியங்கோளீறு   பாலுணர்த்தும்   பயத்தவாய் வாராமையின்  அவற்றை
ஆசிரியர் விதந்து கூறாமல் உடம்பொடு  புணர்த்தியும் சான்றோர்  வழக்கு
நோக்கியும் கொள்ள வைத்தார் என்க. அவையாவன : ககர உயிர் மெய்யும்,
இகரமும், அல், ஆல், அர், ஆர் இய, இயர் முதலிய இடைச்சொற்களுமாம்.
 

எ-டு :வாழ்க அந்தணர், ஆவாழி, வழாஅல் ஓம்பல், மரீஇயது ஒரால்,
வசைதீர்ந்த  என்நலம்  வாடுவது  அருளுவார். மன்னியபெரும, உணீஇயர்
எனவரும்.
 

"இதுசெயல் வேண்டும்" என விழைவுப் பொருட்டாய் வரும் உம் ஈறும்
வியங்கோளாய் நிற்றலின் உம்மீறும் கொள்க.
 

புணர்ச்சி   இலக்கணமரபின்  வண்ணம்  உயிர்மெய்யீறு    உயிரீறாகக்
(ஓசை  கருதிக்)   கொள்ளப்படுதலின்  "ஏவல்   கண்ணிய   வியங்கோட்
கிளவியும்"   என்புழி   ஆசிரியர் அகர  ஈறாக வைத்து விதி கூறியதன்றி
அகரம் வியங்கோள் வினையின்  இறுதியிடைச்  சொல்   என்பதன்று என
உணர்க.   அல்லீறு   வெறுப்பின்கண்  எதிர்  மறைப்பொருளுணர்த்தியும்
ககர ஈறு மா என்னும் முன்னிலையசைச் சொல்லொடு கூடியும் வரும்.
 

எ-டு :'பயனில்சொல்   பாராட்டு   வானை  மகனெனல்!' [குறள்-206]
'உப்பின்றுபுற்கை   உண்கமா  கொற்கையோனே.'  'ஓர்கமா   தோழியவர்
தேர் மணிக் குரலே! எனவரும்.
 

இனி   "வாழிய   என்னும்  செய்கென்  கிளவி"  (எழுத்-211) என்னும்
சூத்திரப்பாடத்தைச் 'செயவென்' கிளவி எனப்பிழை