யாக ஓதி : வர, வாழ என்றாற் போல்வனவற்றை வியங்கோளாக மயங்குவாரும் உளர். அவை எவ்வாற்றானும் வியங்கோளாகா என்க. |
மற்று உரைக்க, கேட்க என்னும் வியங்கோள் முற்று வினை யெச்சமாயும் நிற்றலின் செயவெனெச்சம் முற்றாய் வியங்கோட் பொருள் தருமால் எனின்? அற்றன்று ; வியங்கோள் வேறு, செயவெனெச்சம் வேறு. கேட்க, உரைக்க எனவரும் வழி வியங்கோளாயின் ககர உயிர்மெய் அதன் ஈற்றிடைச் சொல்லாகும். வினை எச்சமாயின் எதிர்காலம் காட்டும் ககர மெய்யினை ஊர்ந்த அகரம் ஈற்றிடைச் சொல்லாகும் என்க. |
மற்று வியங்கோள் வினையும் ஏவல் வினையைப் போலப் பொருள்பற்றியதாகலின் இதனை மட்டும் வினைச் சொல்லின் வகையாக விதந்து கூறியது என்னை யெனின்? வியங்கோள் வினை ஈற்றான் இடமும் பாலும் உணர்த்தாமையானும், மூன்று காலத்திற்கும் ஒப்ப வருதலானும், படர்க்கைக்குரியதாய் அமைந்து ஏனை ஈரிடத்தும் தன்பொருள் வழாதுவருகின்றமையானும், ஐம்பாற்கும் உரித்தாய் வருதலானும், விழைதல் வெறுத்தல், விதித்தல் என்னும் பொருட்கூறுபடுதலானும் இதனை எடுத்தோதினார் என்க. |
ஏவல் வினை முன்னிலைக்கண் அடங்கலான் விதந்து கூறாராயினார் என்க. வினைச் சொற்கள் இடம்பற்றியே வகைப்படுத்தப் பெற்றுள்ளமையை "அவ்ஆறென்ப முற்றியன் மொழியே" (எச்-31) என்றதனானும் அறிக. |
| சூ. 228 : | பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை |
| அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச் |
| செய்யு மென்னும் கிளவியொடு கொள்ளா |
[30] |
க-து : | செய்யுமென்னும் வாய்பாட்டு முற்றுச் சொற்கு எய்தியவற்றுள் சிலவற்றை விலக்குகின்றது. |
| |
உரை:எஞ்சிய கிளவி என மேலே, ஏழற்கும் பொது வகையான் ஓதிய ஐம்பால் மூவிடங்களுள், பல்லோரைக் குறித்து வரும் படர்க்கை இடமும், தன்மையிடமும், முன்னிலையிடமும் ஆகியவை நிகழ்கால முணர்த்துதலுடைய செய்யுமென்னும் வாய்பாட்டு முற்றுச் சொல்லொடு பொருந்தி வாரா. |
எனவே, படர்க்கை இடத்து ஒருவன் ஒருத்தி ஒன்று பல என்னும் நான்கு பாலுக்கு மட்டுமே பொருந்தி வருமென்றவாறு. |