அவ்வயின் என்றது எஞ்சிய கிளவிகட்கு ஓதிய இடமும் பாலுமாகிய பொருட்கண் என்றவாறு. நிகழுங்காலத்துச் செய்யுமென் கிளவி என அதன் காலமுணர்த்தும் இயல்பு கூறியவாறு. அதனான் செய்யுமென்னும் எச்சம் எதிர் காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உரித்தாதல் பெறப்படும். |
எ-டு :அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவையுண்ணும் எனவரும். |
| சூ. 229 : | செய்து செய்யூச் செய்பு செய்தெனச் |
| செய்யியர் செய்யிய செயின் செய செயற்கென |
| அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி |
[31] |
க-து: | நிறுத்த முறையானே வினையெஞ்சு கிளவியின் இலக்கண மாமாறு கூறத் தொடங்கிக் காலத்தானும் பொருள் நிலையானும் வேறுபட்டு வரும் அதன் இயல்பினை வாய்பாட்டான் வகுத்துக் கூறுகின்றது. |
| |
உரை : செய்து முதலாய ஒன்பது வாய்பாட்டுச் சொல்லும் வினையெச்சச் சொற்களாம். |
இறுதிநிலையான் வேறுபடுதலின் அவ்வகை ஒன்பது என்றார். செய்யூ என்பது செய்யா எனவும் வரும். இதனைச் "செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்" (உயிர்மய-20) என்பதனான் அறியலாம். ஒருசாரார் செய்யா என்பதனைத் தனியொரு வாய்பாடாகக் கருதினர். அது பொருந்தாது என்பதனை 'நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின்' (பெயர்-19) என்பதனான் அறியலாம். |
இவற்றிற்குரிய கால எழுத்துக்களை மேலே முற்றுவினைக்குக் கூறியாங்கு அவ்வவற்றிக்கு ஏற்ப அறிந்து அமைத்துக் கொள்க. |
வரலாறு : செய்தென்பது இறந்தகாலம் பற்றிப் பயின்று வரும். எ-டு : ஒத்துநின்றான் உண்டுவந்தான் கற்றுவந்தான் - இவை தடற என்னும் ஒற்றுக்களான் இறந்தகாலங்காட்டித் திரியாது வந்தன. உரிஞ்சி நின்றான், ஓடி வந்தான், கூய்ச் சென்றான், போய் நின்றான் என இவை ஈறுவேறுபட்டு வந்தன. இத்திரிபுகளை உகரத்தின் திரிபென்பார் சேனாவரையார். அது பொருந்தாது என்பதை நச்சினார்க்கினியர் மறுப்புரையானறியலாம். |
செய்து என்னும் வாய்ப்பாட்டுள் காலம் காட்டும் உறுப்புத் தகர மெய்யாகும். இகரமும் அதன் திரிபாகிய யகரப்புள்ளியும் |