நீவாழ நீஓங்க எனச் செயவெனெச்சம் வியங்கோட் பொருளில் வந்தனவாக இக்கால மொழியியலறிஞர் சிலர் மயங்குவர். வாழிய வாழியர் வாழ்க வாழி என்றாற்போல இயர், இய என்னும் ஈறுகளானும் ககர உயிர்மெய்யீற்றானும் இகர உயிரீற்றானும் வேண்டல், வைதல், வாழ்த்தல் (ஆசி) என்னும் பொருள்பற்றித் தற்குறிப்பாக வருவனவே வியங்கோளாகும். ஏவலுணர்த்திவரின் முன்னிலை வினையாகும். முன்னிலை ஏவலைத் தொல்காப்பியம் ஏவல் கண்ணிய வியங்கோட்கிளவி என விதந்து கூறும். அஃது, வழா அலோம்பல், மரீஇயதொராஅல் மகனெனல் மக்கட் பதடிஎனல், என அல், ஆல் ஈறாக வரும். ஆதலின் வாழ, போக, சாவ என்பவை அகர ஈற்றனவாய் வினையெச்சமாயே நிற்கும். இவற்றுள் போக என்பது |