வினையியல்257

சூ. 232 :

அம்முக் கிளவியும் சினைவினை தோன்றின்

சினையொடு முடியா முதலொடு முடியினும்

வினையோ ரனைய என்மனார் புலவர்

(34)
 

க-து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

உரை:  மேல்   வினைமுதல்   முடிபின  எனப்  பெற்ற  அம்மூன்று
வினையெச்சச்    சொற்களும்   சினைவினை   பற்றியவாகத்  தோன்றின்,
அச்சினைவினையொடு  முடியாமல்  அதன் முதல் வினையொடு முடியினும்
சினை   வினையொடு  முடியும்   முடிபிற்கு   ஒத்த   தன்மையவாமெனக்
கூறுவர்புலவர்.    என்றது,  சினையாவது முதற் பொருளின் கூறேயாதலின்
முதலுக்குரிய வினை சினைக்கு உரித்தாம் என்றவாறு.
 

உயர்திணைச்  சினையாயின்  முதல்  வினைக்கும்  சினை  வினைக்கும்
எழுத்து  வேறுபாடுள்ளமையின் அம்முடிபு மரபினவாய்  வருதல்  தோன்ற
என்மனார்  புலவர்   என்றார். முடியினும் என்னும்  உம்மை  சினையொடு
முடிதலே பெரும்பான்மை   என்பது  உணர்த்தி   நின்றது.   அஃறிணைச்
சினைக்கும்  முதற்கும்  எழுத்துவேறுபாடின்மையான் இவ்விதி உயர்திணைச்
சினை பற்றிய தென்பது உய்த்துணரப்படும்.
 

எ-டு : சாத்தன்  கையிற்று வீழ்ந்தான் - கையிறூவீழ்ந்தான்,  கையிறுபு
வீழ்ந்தான்   எனவரும்.   கை,   சாத்தனின்  வேறன்மையின்   இம்முடிபு
வழுவாகாமை உணர்க.
 

உம்மையான்,   சாத்தன்கையிற்று   வீழ்ந்தது  -   கையிறூ  வீழ்ந்தது,
கையிறுபு வீழ்ந்தது   எனவும்   வரும். இந்நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர்
கூறும் ஒவ்வா விளக்கங்களை ஓர்ந்து விலக்குக.
 

சூ. 233 :

ஏனை எச்சம் வினை முதலானும்

ஆன்வந் தியையும் வினைநிலை யானும்

தாமியல் மருங்கின் முடியும் என்ப

(35)
 

க-து :

ஏனைய  பன்னிரண்டு  எச்சவினைகளும்   முடிபு கொள்ளுமாறு
கூறுகின்றது.
 

உரை:மேற்கூறிய   மூன்றுமல்லாத   "செய்தென" என்பது  முதலாக
"இடத்து"   என்பதீறாக  நின்ற  பன்னிரண்டு வினையெச்சங்களும் தத்தம்
வினைமுதல்வினையானும்        ஆண்டுவந்து      இயையும்       பிற
வினைமுதல்வினையானும்   தாம்   இயலுமிடத்து   வரைவின்றி   முடியும்
எனக்கூறுவர் ஆசிரியர்.