வினையியல்259

உண்டுவந்தான்,    சென்றுவந்தான் ;   கண்டுவந்தான்     எனமுடியாமல்
சாத்தன்  உண்டு  சென்று  கண்டு வந்தான் எனவருதலும் சாத்தன் உண்டு
சென்று காணூ வந்தான் எனவருதலுமாம்.
 

முன்னது  முடிய  முடியுமன்  பொருளே  என்றது.  அத்தொடரின்கண்
சாத்தன்   உண்டான்  என்பது  எச்சமாய்,  உண்டு   சென்றான்  எனவும்,
சென்றான் என்பது எச்சமாய்  உண்டு சென்று கண்டான் எனவும், கண்டான்
என்பது எச்சமாய்க் கண்டு  வந்தான் எனவும், ஒன்று  ஒன்றனொடு முடிந்து
இறுதியாக வந்தான் என்பதனொடு பொருள் முற்றி நிற்றலாம்.
 

முன்னது முடிய என்றதன்றி வினைமுற்றான் முடிய  எனக் கூறாமையின்,
பறந்து  வந்து பாடிய  கிள்ளை, என்புழிப்  பறந்து என்னும் வினையெச்சம்
வந்து என்னும் வினைமுற்றுக்குன்றிய  வினையெச்சத்தொடு  முடிந்து, வந்து
என்னும் வினையெச்சம் பாடிய என்னும் வினையாலணையும் பெயர் குன்றிய
பெயரெச்சத்தொடு  முடிந்து, பாடிய  என்னும்  பெயரெச்சம்தான் கொண்டு
முடிந்த  பறவை  என்றும்  பெயரொடு  பொருள்முற்றி நிற்பினும், சாத்தன்
ஆண்டுச் சென்று கண்டுவருதல் நலம், எனத் தொழிற் பெயரொடு (வருதல்)
முடிந்து, நலம் என்பதனொடு பொருள்  முற்றினும் முன்னது முடிய முடிந்து
நின்றவாறாம் எனக் கொள்க.
  

இங்ஙனம்  பின்னிற்கும் எச்சங்களை  முற்றுப்  பொருள்படக் கொண்டு
முடிந்து  தொடர்தலின் 'மன்' ஆக்கத்தின்கண் வந்தது.  பிறவும் இவ்வாறே
ஓர்ந்து அமைத்துக்   கண்டு   கொள்க.  மற்றுச் சாத்தன் உண்டு செல்லக்
காணின்    வந்தான்      என்பனவும்      அடுக்கி     வந்தனவேனும்
முன்னதுபின்னதனொடு    முடிதற்கு     இயைபில்லாமையின்   இங்ஙனம்
வருவனமுடியா வென்பது விளங்க "முன்னது முடிய  முடியுமன் பொருளே"
என்றார்.
 

எனவே,    பொருளும்   காலமும்   ஒத்து   இயையும் வாய்பாடுகளே
அடுக்கிவரும் என்பதும்   இயைபில்லாதவை   அடுக்கி   வாரா என்பதும்
புலனாம். இதனானும் வினையெச்சங்களின் பொருள்  முடிபு வேறுபாடுகளே
ஈண்டுக்  கூறுதல் புலனாகும்.    முடிக்குஞ்    சொல்பற்றிய   இலக்கணம்
எச்சவியலுள் பெறப்படும்.
 

இங்ஙனம்   வினைஎஞ்சு   கிளவி   அடுக்கி  வந்து கொள்ளும் முடிபு
கூறியாங்குப்  பெயரெச்சம்  அடுக்கி   வந்து   முடிபு   கோடல்   பற்றிப்
பெயரெச்சத்து அதிகாரத்து   ஆசிரியர்   கூறியிருத்தல்   வேண்டும். அவ்
இலக்கணச்    சூத்திரம்   ஆண்டுக்    காணப்பெறாமையான்   மறைந்து
போயிருத்தல் வேண்டும். அதனான்