வினையியல்263

பொருள்பட   நிற்றலின்   வினைமுதற்கிளவியாம்.   நின்முகம்    காணும்
மருந்தினேன் என்பது   நின்முகம்    காணுதலை   மருந்தாக உடையேன்
எனவிரியின் காட்சியை மருந்தாக உருவகம் செய்தமையின்  வினைப்பெயர்
கொண்டதாம்.  ஆறு   சென்றவியர் என்பது ஆற்றின்கண் சென்றமையான்
தோன்றிய  வியர்வை  என  விரியின்   காரண    காரியப்பொருட்டாய்க்
கருவியின்கண்   அடங்கும். கலந்த   மயக்கம் (மரபியல்-91) என்பது அது.
உண்ட இளைப்பு எனவும் வரும்.
 

பொச்சாவாக்கருவி  என்பது (கருவி-மனம்) பொச்சாவாமையை  உடைய
மனம் என   விரியின்  செயப்படு   பொருளின்பாற்படும்.  நிலம்பூத்தமலர்
(பூத்தல்-பொலிதல்)   நிலம்  பொலிவுறுதலைச் செய்த  மலர் என விரியின்
செயப்படுபொருளாம் - நிலத்தின்கண் பொலிவு   பெற்றமலர்  எனவிரியின்
வினைமுதற் கிளவியாம்.
 

குண்டு   சுனை  பூத்த  வண்டுபடு  கண்ணி, என்பது பூத்த  பூக்களை
உடைய   கண்ணி   என    விரியின்   செயப்படு   பொருளாம் - பூத்த
பூக்களாற்றொடுத்த கண்ணி என விரியின்  கருவியாம்.   இங்ஙனம்  வரும்
ஏனையவற்றையும்   இவ்வாறே   எச்சச்   சொல்லிற்கும்  முடிக்கும் சொற்
பொருட்கும் உள்ள உறவினை ஓர்ந்து ஓதப்பட்டவற்றுள் அடக்கிக் கொள்க.
 

இனி, "அவ்வறு பொருட்கும் ஓரன்ன  உரிமைய" என்றதனான் ஓரன்ன
உரிமையின்றிச் சிறுபான்மையாக வரும் இன்னதற்கு இது பயனாக என்பவை;
அரசன்  ஆ   கொடுக்கும்  பார்ப்பான் - கொடுத்த  பார்ப்பான்  எனவும்
சாத்தன் ஆடை ஒலிக்கும்  கூலி,    ஒலித்த   கூலி  எனவும் வருதலும் ;
நிலம்பற்றி   நின்று   நீக்கற்    பொருள்தோன்ற   பழமுதிரும்   கோடு,
பழமுதிர்ந்தகோடு என வருதலும் கொள்க.
 

இனிச்  'செய்த   என்னும்   வாய்பாடுபற்றி    "இன்ன   தன்மையின்
அருமையின்" எனவும்  அன்னதன்மையும் அறிந்தீயார்  எனவும் கரியமலர்
நெடுங்கண்  -    செய்யகோல்     எனவும்,    பெயரெச்சக்   குறிப்பாய்
வருவனவற்றையும் கண்டு கொள்க.
 

சூ. 236 :

அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி

முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே

(38)
 

க-து :

பல்லோர்   படர்க்கை   (வினை - 30)  என்னும்  சூத்திரத்துச்
செய்யும் என்னும் வாய்பாட்டுச்   சொல்லை  "நிகழுங்காலத்துச்
செய்யுமென்னும்