264வினையியல்

கிளவி" எனப் பொதுவாகக்  கூறினமையின்   அவ்விதி  செய்யும் என்னும்
முற்று வினைக்கு  என்பது பெறப்பட வைத்துச் செய்யும்  என்னும்  எச்சம்
"எஞ்சிய   கிளவி" (வினை  -   28)   என்னும்   சூத்திரவிதியே பெறும்
என்கின்றது.    'செய்யும்'    என்னும்    வாய்பாட்டுச்   சொல்   பற்றிய
ஐயமகற்றுதலுமாம்.
 

உரைசெய்யுமென்னும் வாய்பாட்டுச்  சொல் மேற்கூறிய அறுவகைப்
பொருளொடு      முடியும்     தன்மைத்தாய்    எச்சமாய்   வருதற்கண்
'பல்லோர்படர்க்கை',  என்னும்  சூத்திரத்தின்கண்  நீக்கப் பெற்ற பல்லோர்
படர்க்கை,   முன்னிலை,   தன்மை    ஆகிய    மூன்று   பகுதியொடும்
வருதற்குரியதாகும்.
 

எ-டு :அவர் வாழும் ஊர், நீ வாழும்   ஊர்,   நீயிர்  வாழும்  ஊர்
யான் வாழும்ஊர், யாம் வாழும்   ஊர்,   நாம்  வாழும்  ஊர். எனவரும்.
இனிச்  செய்யும்   என்னும்  முற்றிற்கும் செய்யும்  என்னும்  எச்சத்திற்கும்
வேறுபடாவது:  முற்றாயின்  ஓர்எழுவாய்க்குப்  பயனிலையாகி   நிற்கும் -
எச்சமாயின் ஓர் எழுவாயின் பெயர்ப் பயனிலைக்கு அடையாகி நிற்கும்.
 

சூ. 237 :

பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்

எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியா

(39)
 

க-து :

செய்யும்   செய்த   எனவும்,  செய்து  செய்யூ  செய்பு எனவும்
பெயரெச்ச,   வினையெச்ச   இயல்புகளை   விதிவாய்பாட்டான்
ஓதினமையின் அவை   எதிர்மறையாய்   வருமிடத்துத்    தாம்
எச்சமாய் நின்று அவ்வவ்விலக்கணங்களை   ஏற்றலிற்ரியா  என
அவற்றின்கண் நிகழ்வதோர் ஐயமக றுகின்றது.
 

முற்றுவினைகளின் இலக்கணத்தை ஈறுபற்றி ஓதினமையான் அவை விதி
வினைக்கும்    மறைவினைக்கும்   ஒக்குமென்க.  பெயரெச்சம்  அதிகாரப்
பட்டு நின்றமையின் பெயரெச்சகிளவி முற்கூறப்பட்டது.
 

உரை : செய்யும்  செய்த  என ஓதப்  பெற்ற பெயரெச்சச் சொற்களும்
செய்து முதலாக  ஓதப் பெற்ற  வினையெச்சச்  சொற்களும் எதிர் மறுத்துக்
கூறினும் தம் எச்சப் பொருண்மையினின்று திரியா.
 

பொருள் நிலையாவது பெயரெச்சம்  நிலம்  முதலாய பொருட்குரியவாய்
முடிதலும்  வினையெச்சம்  தன்வினைமுதல் வினையொடும் பிறவினைமுதல்
வினையொடும் முடிதலுமாம்.
 

எ-டு :உண்ணா இல்லம், உண்ணாச் சோறு, உண்ணா நாள், வனையாக்
கோல், ஓதாப் பார்ப்பான், நடவா நடை