வினையியல்265

எனவரும். இவை,  செய்யும்   செய்த  என்னும்  இருவகை  எச்சத்திற்கும்
எதிர்மறையாம். எதிர்மறை மூன்று காலத்திற்கும் உரித்தாய் நிற்கும்.
 

உண்ணாத,  வனையாத,  ஓதாத  என ஈறு கெடாமல் வருபவை செய்த
என்பதற்குச்  சிறந்தும்  செய்யும் என்பதற்குச்   சிறவாதும் நிற்கும். வினை
யெச்சத்துள்,  உண்ணாது  நின்றான்  என்பது,   செய்து   செய்யூ  செய்பு
என்பவற்றிற்கு  எதிர்  மறையாய்   வரும்.  செய்தென என்பதற்கும் இஃது
ஏற்கும். உண்ணாமைக்கு வந்தான் என்பது உண்ணியர், உண்ணிய, உணற்கு
என்பவற்றிற்கு எதிர்மறையாய்  வரும்.  இஃது  உண்ணாமை, உண்ணாமே,
உண்ணாமல் என  ஈறுவேறுபட்டும் நிற்கும். உண்ணாதேல், உண்ணாவிடின்
என்பவை உலகவழக்கிற்குரியவாய்ச் சிறுபான்மை வரும்.
  

பின் முன் கால் கடை வழி  இடத்து  என்னும் ஈற்று வினை எச்சங்கள்
எதிர்மறையாங்கால்   அவற்றின்   முதனிலைகளே    எதிர்மறைவடிவாகத்
திரியும்.
 

எ-டு : உண்ணாதபின், உண்ணாதமுன், (உண்ணாமுன்) உண்ணாக்கால்,
உண்ணாக்கடை,   உண்ணாத   வழி (உண்ணா   வழி)   உண்ணாவிடத்து
எனவரும். எதிர்மறையாகாரம் இடையே புணர்ந்துவரும் எனினும் ஒக்கும்.
 

பிறஎச்சங்கள் அவ்வாய்பாடு திரியாமல், கொள்வான்வந்திலன் உண்பான்
வந்திலன்  எனப்   பிறஎதிர்மறைச்   சொல்லொடு   கூடிவரும். ஒன்றென
முடித்தல் என்பதனான்   'செய்யும்' என்னும்     முற்று    எதிர்மறுத்துக்
கூறவருங்கால்  தனது எழுவாய்க்கேற்ப  ஈறுதிரிந்து  செய்யான், செய்யாள்,
செய்யாது,   செய்யா  எனவரும். செய்யும் என்னும்   முற்றினை  ஈறுபற்றி
ஓதினமையான் ஈண்டு அடக்கப்பட்டதென்க.
 

சூ. 238 :

தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்

எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்

(40)
 

க-து :

இருவகை எச்சத்திற்கும் உரியதொரு மரபு கூறுகின்றது.
 

உரை : இருவகை எச்சங்களும்  முடிக்குஞ் சொல்லொடு இடையீடின்றி
முடிதலேயன்றித் தமக்கு ஒழிபாக நிற்கும் வினை முற்றொடும்., பெயரொடும்
இயைந்து முடியும் குறிப்பினவாய்வரின்  அவை எவ்வகைச்  சொல்லாயினும்
இடையே நிற்றலைத் தவிரார் ஆசிரியர்.