இடையியல்285

உரை:தெளிவுகுறித்து  வரும்  ஏகாரமும்,   சிறப்புக்குறித்து   வரும்
ஓகாரமும் அளபெடுத்தலான் ஓங்கிய  இசையை  உடையவாய்  வருமெனக்
கூறுவர் புலவர். எடுத்துக் காட்டுக்கள் மேற்காட்டப் பெற்றன. (சூ- 9, 8.)
 

சூ. 263 :

மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை

அப்பா லிரண்டென மொழிமனார் புலவர் 

(14)
 

க-து:

மற்று என்பதன் பொருட்கூறு இவை என்கின்றது.
 

உரை:மற்று  என்னும்   இடைச்சொல்,   வினைமாற்றாதலும்,  அசை
நிலையாதலும் என அதன்பொருட்பகுதி இரண்டெனக் கூறுவர் புலவர்.
 

எ-டு : "மற்றறிவாம்   நல்வினை யாம் இளையம்" என்றவழி நல்வினை
பின்னர் இயற்றுவாம்  என  மாற்றுதலின்   வினைமாற்றாயிற்று.   அதுமற்
றவலங் கொள்ளாது நொதுமற்கழறும், என்பது அசைநிலையாய் வந்தது.
 

சூ. 264 :

எற்றென் கிளவி இறந்த பொருட்டே
(15)
 

க-து:

எற்று என்னும் இடைச் சொற்பொருள் இதுவென்கின்றது.
 

உரை : எற்று என்னும் இடைச்சொல்   காலச்  செலவினை உணர்த்தும்
பொருட்டாய்வரும்.
 

எ-டு : எற்றென்   உடம்பின்    எழில்நலம் :   என்றவழி   முன்னர்
எழிலுடையதாக  இருந்த  உடம்பு  இப்பொழுது   எழில் குன்றியமையைப்
புலப்படுத்தலின்   காலக்   கடப்பினை   உணர்த்தி    நிற்றல்   காண்க.
என் நலம் இறந்தது எனின் அது கழிவுப் பொருட்டாம் என்க.
 

சூ. 265 :

மற்றையது என்னும் கிளவி தானே

சுட்டுநிலை ஒழிய இனங்குறித் தன்றே

(16)
 

க-து:

'மற்றை' என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது.
 

உரை:'மற்றை' எனும்  இடைச்சொல்  யாதானும்   ஒரு  பொருளைச்
சுட்டும்  நிலைமையைத்   தவிர்த்து   எடுத்த   ஒரு  பொருளிற்கினமான
பொருளைக் குறித்து வரும்.
 

இச்  சொல்   பெரும்பான்மையும்   யாதானும்   ஒரு   பால்  பற்றிய
சுட்டுப்பெயரோடிணைந்து    வருமென்பதறிவித்தற்கு   'மற்றையது'   என
ஓதினார்.