| சூ. 268 : | அந்தில் ஆங்க அசைநிலை கிளவியென்று |
| ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப |
(19) |
க-து: | அந்தில் என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை:அந்தில் என்னும் இடைச்சொல் ஆங்கு என்னும் இடக்குறிப்பும் அசைநிலையும் எனப்படும் அவ்விரண்டு இயல்பினதாகும் என்று கூறுவர் புலவர். ஆங்கு என்பது பாவோசை கருதி ஆங்க என விகாரமாய் நின்றது. |
எ-டு : வருமே, சேயிழை அந்திற் கொழுநற் காணிய (குறு - 293) என்பது இடக்குறிப்பு. அந்திற் கச்சினன் கழலினன் (அகம் - 79) என்பது அசைநிலை. |
சூ. 269 : | கொல்லே ஐயம் |
(20) |
க-து : | 'கொல்' என்னும் இடைச்சொற்பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை:கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருட்டாய் வரும். |
எ-டு : சாத்தன் வருங்கொல்? எனவரும். இவ் இடைச்சொல் குற்றி கொல்லோ மகன்கொல்லோ எனவினா எழுத்தொடும் வரும். |
சூ. 270 : | எல்லே இலக்கம் |
(21) |
க-து : | 'எல்' என்னும் இடைச் சொற்பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை:'எல்' என்னும் இடைச்சொல் அசைந்திலங்குதல் பொருட்டாகும். |
எ-டு : எல்வளை மகளிர் (புறம்-24) எனவரும். அசைதலையுடைய வளையணிந்த மகளிர் என்பதுபொருள். |
இலக்கம் என்பது இலங்குதல், விளங்குதல், துலங்குதல் என்னும் பண்பு குறியாது, தொழிற்குறிப்புணர்த்தி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று என்க. 'எல்' என்பது ஞாயிற்றினைக் குறிக்குங்கால் பெயராயும் எல்லினன் பெரிது - எல்லிற்றுப்போது என ஒளிர்தலைக் குறிக்குங்கால் வினையாயும் எல்லொளிமதியம் எனப் பண்பினைக்குறிக்குங்கால் உரிச்சொல்லாயும் நிற்கும். அசைதற்குறிப்புணர்த்தும் வழி இடைச்சொல்லா, மென்க, |
சேனாவரையர் இலக்கம் என்பதற்கு விளங்கித் தோன்றுதல் என்னும் பண்புப் பொருள் கொண்டு உரிச்சொல் நீர்மைத்து |