என்றார். வளைகள் அசைந்து இலங்கும்நிலைமையைச் சுட்டுதற்கண் அஃது இடைச்சொற்குறிப்பாதல் நோக்கி ஆசிரியர் இடையியலுள் வைத்தாரென அறிக. |
இவ்இடைச்சொல்லின் பொருண்மை ஓராமல் எல்லே இயக்கம் எனவும் எல்லே விளக்கம் எனவும் பாடங்கொண்டு உரை கூறுவாரும் உளர். இவை பாடமாயின் அஃது உரிச் சொல்லேயாமென்க. |
| சூ. 271 : | இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி |
| பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே |
(22) |
க-து: | ஆர் என்னும் இடைச் சொல்லின் பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை:ஆர் என்னும் இடைச்சொல் இயற்பெயர்களின் முன்னர் அவற்றைச் சார்ந்து வந்து பல்லோரறியுஞ் சொல்லுக்குரிய ரகார ஈற்றுப் பெயர் போல உயர்திணைப் பன்மை வினையான் முடியும். |
எ-டு : சாத்தனார் வந்தார் - முடத்தாமக்கண்ணியார் வந்தார். - கொற்றனார் வந்தார் எனவரும். |
ஆர் என்னும் பாலுணர்த்தும் இறுதி இடைச்சொல்லை நீக்குதற்கு இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி என்றார். பலர்க்குரிஎழுத்தின் வினை யொடு முடிமே என்றதனான் அவை ஒருமையீற்றுப் பெயர்கள் என்பதும், அஃது உயர்த்தற் பொருட்டாய் வருமென்பதும் பெறப்படும். தம்மீறுதிரிதலும் என்றதனான் ஆர் - ஆரை, எனத் திரிந்துநின்றது. 'எழுத்தின்' என்பதனுள் இன் உவம உருபாய் நின்றது. தன்னின முடித்தல் என்னும் உத்தியான் தந்தையார் வந்தார் மகனார் வந்தார் எனமுறைப்பெயர்க்கண் வருதலும் கொள்க. அஃறிணை இயற்பெயர் பலர்க்குரியெழுத்தான் முடியாமையின் இயற்பெயர் என்றது உயர்திணை விரவுப் பெயர் என்பது பெறப்படும். |
இனி, நரியார் வந்தார் - யானையார் வந்தார் என அஃறிணைக்கண்ணும் வருமால் எனின் அவை 'தம்மரபினவாய்' வந்த "வழக்கி னாய உயர்சொற் கிளவி" என்பது கிளவியாக்கக்துட் கூறப்பட்டது. நம்பியார் நங்கையார் என்பனவும் ஒருவரைக்கூறும் பன்மைக்கிளவியாய் அச்சூத்திரத்துள் அடங்குமென்க. அதனான் இச்சூத்திரம் திணைவழுவும் பால் வழுவும் அமைத்ததாகக் கூறுதல் பொருந்தாமையறிக. |