சூ. 272 : | அசைநிலைக் கிளவி ஆகும்வழி யறிதல் |
[23] |
க-து : | இதுவுமது. |
| |
உரை:மேற்கூறப்பெற்ற ஆரைக்கிளவி அசைநிலைக் கிளவியாயும் வரும், அங்ஙனம் வருமிடம் அறிந்து கொள்க. |
இதனானும் ஆரைக்கிளவியின் பொருட்குறிப்புணர்த்துதலே மேலைச் சூத்திரத்தின் நோக்கென்பது தெளியலாம். ஆகும் என்னாது "வழியறிதல்" என்றதனான் அசைநிலையாதல் இயற்பெயர் முன்னரன்றி ஏனைச் சொற்களின் முன்னர் வருமிடத்தேயாம் என்க. |
எ-டு : "எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே" (எழு-61) "பெயரி னாகிய தொகையுமா ருளவே" (சொல் - 61) எனவரும். |
| சூ. 273 : | ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை |
| ஆயிரண் டாகும் இயற்கைய என்ப |
[24] |
க-து : | ஏ-குரை, என்னும் இடைச் சொற்குரிய பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை : ஏ என்னும் இடைச்சொல்லும் - குரை என்னும் இடைச்சொல்லும் (ஒவ்வொன்றும்) இசை நிறையும், அசை நிலையும் என அவ்இரண்டியல்பின என்று கூறுவர் புலவர். |
இயற்கையாவது பொருட்கூறுபாடு. பொருளான் ஒத்து வருதலின் ஏயும் குரையும் ஒருங்கு கூறினார். இவ்ஏகாரம் தொடர்மொழியின் முதற்கண் தனித்து வருதலின் "தேற்றம் வினாவே" என்றதனொடு கூறாராயினார் என்க. |
எ-டு : 'ஏஎ இஃதொத்தன் என்பெறான் கேட்டைக்காண்' (கலி-61) இஃது இசைநிறை. ஏஎஎன் சொல்லிய வாறு? இஃதசைநிலை. 'அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே' (புறம்-5) இஃது இசைநிறை. 'பல்குரைத் துன்பங்கள் சென்று படும்' (திருக்குறள்-1045.) என்பதும் அது. அசைநிலையாய் வருதல் வந்துழிக்கண்டு கொள்க. |
சூ. 274 : | மாஎன் கிளவி வியங்கோ ளசைச்சொல் |
(25) |
க-து: | மா என்னும் இடைச்சொற்குரிய பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை:மா என்னும் இடைச்சொல் வியங்கோளின்கண் அசை நிலையாய் வரும். |
எ-டு: "உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே" எனவரும். |