இடையியல்291

எ-டு : "ஆங்கக்  குயிலும்   மயிலும்  காட்டிக்  கேள்வனை விடுத்துப்
போகி   யோளே"  எனவரும்.  உரையசையாவது  பொருள்காணுமிடத்துப்
பொருள் இன்றி நிற்றல்.
 

சூ. 279 :

ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும்
(30)
 

க-து:

போலும் என்னும் இடைச்சொல்லின் தன்மை கூறுகின்றது.
 

உரை:ஒப்புமை     உணர்த்தாது    வரும்     போலும்   என்னும்
இடைச்சொல்லும் ஆங்க என்னும் இடைசொற் போல உரையசையாக வரும்.
  

எ-டு : மங்கலம்   என்பதோர்   ஊர்    உண்டுபோலும்.   எனவரும்
தெளிவின்றி    ஒரு    கருத்தை    உணர்ந்து   கொள்ளுதற்கண்   இவ்
இடைச்சொல்   வருதலின்   "அப்பொருட்டாகும்"   என்றார்.   இதனான்
அசைநிலையும் ஓராற்றான் பொருள்குறித்து நிற்கும் என்பதுணர்த்தினார்.
 

சூ. 280 :

யாகா

பிறபிறக்கு அரோபோ மாதென வரூஉம்

ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி

(31)
 

க-து:

பொதுவாகவரும் அசைநிலை இடைச்சொற்கள் இவை என்கின்றது.
 

உரை:  யா, கா, பிற,   பிறக்கு, அரோ, போ, மாது   எனச்  சொல்ல
வரும் அவ் ஏழு இடைச் சொற்களும் அசைநிலையாய் வரும்.
 

எ-டு:யா   பன்னிருவர்   மாணாக்கர்   அகத்தியனார்க்கு  எனவும்
புறநிழற்பட்டாளோ     இவளிவட்காண்டிகா   எனவும்,    தான்     பிற
வரிசையறிதலின்   தன்னுந்தூக்கி    எனவும்     நசைதரவந்தோர்  நசை
பிறக்கொழிய எனவும், நோதக இருங்குயில்   ஆலும்   அரோ   எனவும்,
பிரியின் வாழா தென்போ   தெய்ய   எனவும்,   விளிந்தன்று   மாதவர்த்
தெளிந்தவென் நெஞ்சே எனவும் வரும்.
 

சூ. 281 :

ஆக ஆகல் என்பது என்னும்

ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை
[32]
 

க-து:

பிரிவின்றிவந்து   அசைநிலையாகும்   இடைச்சொற்கள்   இவை
என்கின்றது.
 

உரை:ஆக,  ஆகல்,   என்பது, என்னும்,  அம்மூன்றும்  அம்மூன்று
சொற்களினிடத்தும் இணைந்து வந்து அசைநிலையாகும்.