உரை:இரண்டு மாத்திரை யளவிற்றாயிசைக்கும் மொழியிறுதியாகி வருதலில்லாத உயிரெழுத்தாகிய ஒளகாரம், மேற்கூறிய இடைச் சொற்களைப் போல இரட்டித்து நிற்குமிடத்தும் அளபெடுத்து நிற்குமிடத்தும் அளபெடாது தனித்து நிற்குமிடத்தும், குறிப்பானும் இசையானும் நெறிப்படத் தோன்றுதலான் அதன் பொருள்வேறுபடுதல் உளவென்று கூறுவர் புலவர். |
இஃது இடைச்சொல்லாய்ப் பொருள் குறித்து நிற்கும் என்றலின் ஆயியல் நிலையும் காலத்தானும் என்றது பிரிவின்றி இணைந்து வரும் நிலையை மட்டுமே சுட்டிற்றென அறிக. |
கௌ, வௌ என்னும் உயிர்மெய்களை நீக்குதற்காக இறுதியில் உயிரே என்றும், எகர ஒகரங்களை நீக்குதற்காக ஈரளபிசைக்கும் என்றும் கூறினார். |
இங்ஙனம் இவ் ஒளகாரம் இணைந்தும் அளபெடுத்தும் தனித்தும் வருங்கால் ஒன்றற்கொன்று ஓசையான் வறுபடுதலின் 'குறிப்பின், இசையான், நெறிப்படத் தோன்றும்' என்றார். |
வரலாறு: "ஒளஒள இவன் தவஞ் செய்தவாறு" என்னுமிடத்து வியப்பும், ஒளஉ இவன் போர் செய்தவாறு என்புழிச் சிறப்பும், ஒள இனி வெகுளல் என்னுமிடத்து மாறுபாடும் குறிப்பானுணர்த்தி நிற்குமாறு அறிக. பிறபொருள் குறித்து வருமேனும் கண்டுகொள்க. இவ் ஒளகாரமே இக்காலத்து ஓகாரமாக வழங்குகின்றதுபோலும். |
சூ. 283 : | நன்றீற் றேயும் அன்றீற் றேயும் |
| அந்தீற் றோவும் அன்னீற் றோவும் |
| அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் |
(34) |
க-து: | ஒருசார் குறிப்பிடைச் சொற்கள் ஆமாறு கூறுகின்றது. |
|
உரை:நன்றே, அன்றே எனவரும் சொற்களும், அந்தோ, அன்னோ எனவரும் சொற்களும் அவைபோல்வனவாய்வரும் பிறவும் இடைச் சொற்களாய்க் குறிப்புப் பொருள்பற்றி வரும். |
அம்முதனிலைகளொடு கூடியல்லது குறிப்புப்பொருள் தாரா என்பதறிய நன்றீற்றேயும் அன்றீற்றேயும் அந்தீற்றோவும் அன்னீற்றோவும் எனவிதந்து கூறினார். அதனான் இவற்றை வேறு கூறினார் என்க. இவை தனித்தும், ஒரோவழி இரட்டித்தும் வருதலின் பிரிவிலசைநிலை கூறிய அதிகாரத்து வைத்து ஓதினார் என்க. |