310உரியியல்

தடி, தடு   (தடுமாற்றம்)   என   வேறு    எழுத்துக்களைப்     பெற்றுப்
பெயராகவும்   தடவு,   தடவி,   தடவும்-தடி, தடிந்தான், தடித்தான், தடிக
என வேறு எழுத்துப்பெற்று வினையாகவும், தட்டு,   தட்டி    எனப்பெயர்
வினைகட்குப்   பொதுவாகவும்  தடதட   எனக்குறிப்பிடைச் சொல்லாகவும்
நிற்குமாறு கண்டு கொள்க.
 

இங்ஙனம்   உரிச்சொற்கள்    பல்வேறு     நிலைகளாக   வருதலின்,
"இனைத்தென   அறியும்   வரம்புதமக்  கின்மையின்" என்றும் "ஓம்படை
யாணையிற்   கிளந்தவற்  றியலான்   பாங்குற   உணர்தல்"    (உரி-98)
என்றும்,  "எச்சொல் லாயினும்   பொருள்வேறு   கிளத்தல்"   (உரி - 1)
என்றும் கூறினார் என்க.
 

சூ. 299 :

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா

வெளிப்பட வாரா உரிச்சொல் மேன

(2)
 

க-து :

"எச்சொல்லாயினும்   பொருள்வேறு   கிளத்தல்"  என்றதனான்
எல்லாச்  சொற்களும்   கிளந்து    கூறப்படல்   வேண்டுமென
மேல்நின்ற விதிக்கு ஒரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் : பன்முறையானும்   பரந்துபட்டு   வரும்  உரிச்சொற்களுள்
திரிபின்றிப்   பொருள்  தருபவை   கிளத்தல்  வேண்டாதன   ஆதலின்,
கிளத்தல்,   வெளிப்பட     வாரா     உரிச்சொற்களின்    மேலனவாம்.
அவையாவன: உரிச்சொற்களுள் பெயர் வினைகட்கு  முதனிலையாகவரினும்
தனித்துவரினும்   பொருள்     வேறுபடாமல்   வருபவை    வெளிப்படு
சொற்களாம்.  பெயர்   வினைகட்கு   முதனிலையாக   வருங்கால்   ஒரு
பொருளும்,   தனித்து   வருங்கால் ஒரு  பொருளும், தந்து திரிவுபடுபவை
வெளிப்பட வராத சொற்களாம்.
 

எ-டு : 'கொள்'   என்பது  குறிப்படியாகத் தோன்றியதொரு  நிரம்பிய
உரிச்சொல், இதன்பொருள்  ஏற்றல்,   அகப்படுத்தல்,   இது   கொள்கை
- கொள்ளல்,   கொள்ளி,   கொள்ளை,   கொளு   முதலிய பெயர்கட்கும்
கொண்டான்,   கொள்ளான்     முதலியவினைகட்கும்     முதனிலையாய்
நிற்றற்கண்ணும்,     குறிக்கோள்,        மாறுகோள்,     கோள்வல்லார்
எனத்தனித்து நிற்றற்கண்ணும்ஒத்த   பொருளே  தருதலின் இன்னோரன்ன
வெளிப்படு சொற்களாம்.
 

உற் (உறு)   என்பது   குறிப்பு   அடிப்படையாகத்   தோன்றியதொரு
குறைச்சொற்கிளவி. அஃது உகர   முதலிய  எழுத்துப்   பெற்று   நிரம்பி
உறுதி, உறுவர், உறவு என்னும் பெயர்கட்கு   முதனிலையாக   நிற்றற்கண்
அடைதல் என்னும் பொருளும், உறுகண் என்புழித்