துன்பம் என்னும் பொருளும், உற்றான்-உற்று-உற - உறுக என்னும் வினைகட்கு முதனிலையாக நிற்றற்கண் பொருந்துதல் கூடுதல் அடைதல் என்னும் பொருள்களையும் தந்து நின்றது. இச்சொல் தனித்துப் பெயர்கட்கு அடையாய் வருமிடத்து உறுகால் உறுபுனல் என மிகுதிப் பொருள் தந்து நின்றது. ஆதலின் இன்னோரன்ன வெளிப்பட வாராத சொற்களாம். |
ஆசிரியர் இவ்வியலின்கண் பெரும்பான்மையும் தனித்தும் பெயர் வினைகட்கு அடையாயும் வருவனவற்றுள் வெளிப்பட வாராத சிலவற்றை எடுத்துக்காட்டாகக் கூறி உரிச்சொல்லின் இயல்புகளைப் புலப்படுத்துகின்றார். ஒருசில வெளிப்படு சொற்களையும் ஒரோவோர் பயன்கருதிக் கூறுகின்றார். அவை பற்றி ஆண்டாண்டு விளக்கப்பெறும். |
இங்ஙனம் தனித்தும் பெயர்வினைகட்கு அடையாயும் வருதற்கண் உரிச்சொல் என்பதொரு வகைப்பட்டு நிற்கும் கிளவிகள், பொருள் வேறுபட்டு நிற்றல் முதலாய இயல்புகளை விளக்கச் சில சொற்களை ஆசிரியர் விதந்தெடுத்துச் சூத்திரஞ் செய்து உணர்த்துதலை ஓராத இடைக்கால நூலாசிரியன்மாரும் உரையாசிரியன்மாரும் அச்சூத்திரங்கள் அருஞ்சொற் பொருள் விளக்குவனவாகவும், இசை குறிப்பு பண்பு என்னும் பாகுபாட்டிற்கு எடுத்துக் காட்டாக வந்தனவாகவும் கூறிச் சென்றனர். இக்கால ஆய்வறிஞர் பலர் அவ்வாறே கருதி அகராதி அமைப்பிற்குத் தொல்காப்பியரே முதற்கண் அடிகோலியவர் என்பர். இங்ஙனம் தமிழ் மொழியின் நுண்மை சான்ற இலக்கணங்கள் பல காலத்தான் திசைமாறியுள்ளமையை ஓர்ந்து உண்மை தேறுதல் மாணாக்கர் கடனாகும். |
| சூ. 300 : | அவைதாம் |
| உறுதவ நனியென வரூஉம் மூன்றும் |
| மிகுதி செய்யும் பொருள என்ப |
(3) |
குறிப்பு : 'அவைதாம்' என்றது வெளிப்படவாரா உரிச்சொற்களைச் சுட்டி அதிகாரச் சூத்திரமாய் நின்றது. (தெய்வச்சிலையார் உரையுள் இக் கூன் காணப் பெறவில்லை) |
உரை : உறுதவநனி எனக் குறிப்புரிச் சொல்லாக வரும் மூன்றும் மிகுதியை உணர்த்தும் பொருளின எனக் கூறுவர் |
எ-டு : உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் (நற்-300) எனவும், ஈயாது வீயும் உயிர்தவப் பலவே (புறம்-236) எனவும், வந்துநனி |