வருந்தினை வாழியென் நெஞ்சே (அகம்-19) எனவும் வரும். இவை மூன்றும் தனித்து வினைப் போலியாக வரும். 'உறு' பற்றிய விளக்கம் மேற்கூறப் பெற்றது. தவ என்பது தவம், தவல் எனப் பிற எழுத்துப் பெற்றன்றிப் பெயர்வினைகட்கு முதனிலையாக வாராது. 'நனி' என்பது நன் என்னும் குறைச்சொல் இகரம் பெற்று நிரம்பியதாகும். இது நன, நனை எனப்பிற எழுத்துப்பெற்றன்றிப்பெயர் வினைகட்கு முதனிலையாக வராது. நல் என்னும் பண்பு உரிச்சொல்லடி வேறு இதுவேறென்றறிக. இவை மூன்றும் மிகுதிப்பொருள்பற்றித் தனித்து வரும் உரிச் சொற்கள் என்பது புலனாகும். |
சூ. 301 : | உருவுட் காகும் - புரையுயர் பாகும் |
(4) |
குறிப்பு : இதனை இரண்டுசூத்திரமாகக் கோடலே நூல் நெறிக்கொத்தது. |
உரை:உரு என்னும் குறிப்புரிச் சொல் அச்சம் என்னும் பொருட்கு ஆகிவரும். புரை என்னும் குறிப்புரிச்சொல் உயர்தல் என்னும் பொருட்கு ஆகிவரும். |
எ-டு : உருகெழு கடவுள், (உர் + உ = உரு) உருவம், உருத்தல், உருப்பம், உருத்தான், உருகு என்னும் பெயர் வினைகட்கு முதனிலையாகி வரும். 'உரு' என்னும் உரிச்சொல், வடிவு சினவு மெலிவு முதலிய பொருள்தருதலின் இது அவற்றின் வேறாய்த் தனித்துவரும் உரிச்சொல், இது பெயர்ப்போலியாக வரும். புரைய மன்ற புரையோர் கேண்மை (நற்-1) எனவரும். ஒத்தல், பழுது, குற்றம், குடில் என்பவற்றிற்கு முதனிலையாக வரும் புரை என்பது வேறு இதுவேறு. இது வினைப் போலியாய்த் தனித்து வரும் உரிச்சொல். |
சூ. 302 : | குருவும் கேழும் நிறனா கும்மே |
(5) |
குறிப்பு : "குருவும் கெழுவும்" என்பது உரையாளர் கொண்ட பாடம், |
உரை:குரு - கேழ், என்னும் இவ்இரு பண்புரிச்சொற்களும் நிறம் என்னும் பொருட்காகி வரும். |
எ-டு : குருமணித் தாலி எனவும் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம் (அகம் - 26) எனவும் வரும். |
"கெழு" என்பது கெழுதகை - கெழுமிய, கெழுமும், கல்கெழு நாடன், என்றாற்போல வினை முதனிலையாகவன்றி நிறம் என்னும் பொருட்டாய் வராமையின் 'கெழு' என்னும் பாடம் |