உரியியல்315

எ-டு : மையில்  வாண்முகம்  பசப்பூரும்மே  (கலி-7)   என   வரும்.
பசுமைவேறு  பசப்பு  வேறு  என்று  உணர்க. யகரமும் சகரமும் மயங்கல்
கூடாஎன்பதற்காக   இவற்றை    எடுத்தோதினார்.   இயைபு    இசைப்பு
என்பவற்றிற்கும் இவ்விளக்கம் ஒக்கும்.
 

சூ. 309 :

இயைபே புணர்ச்சி
(12)
 

உரை:இயைபென்னும்     குறிப்புரிச்      சொல்   புணர்ச்சியாகிய
பொருளுணர்த்தி வரும். எ-டு : இயைந்த  கேண்மை   இல்லா   கியரோ
(புறம்- 190) எனவரும்.
 

சூ. 310 :

இசைப்பு இசையாகும்
(13)
 

உரை:இசைப்பு   என்னும்     இசையுரிச்     சொல்   (நாதமாகிய)
இசைபொருட்டாய் வரும்.  எ-டு :  வாயிற்றோன்றி  யாழிசையூஉப்   புக்கு
எனவரும்
 

சூ 311 :

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி
(14)
 

உரை:அலமரல்  -  தெருமரல்   என்னும்   குறிப்புரிச் சொல்லாகிய
அவ்விரண்டும் சுழல்தல் என்னும் பொருள்பற்றி வரும்.
 

இவை வினைக்கு முதனிலையாதற்கண்  அலந்தான்,  தெருமந்தான் என
வடிவு  வேறுபட்டு   வருதலின்   அல்ஈறுபெற்றுத்   தனித்து வரும் வழி
உரிச்சொல்லாய்ப்   பெயர்ப்போலியாய்   நிற்கும்   என்பது  உணர்த்தற்கு
எடுத்தோதினார்.
 

எ-டு : அலமரலாயம்   (ஐங்-64)   எனவும்  தெருமரல்  உள்ளமொடு
அன்னை துஞ்சாள் எனவும் வரும். ஏக்கற்ற உலமரல்போற்றாய் (அகம்-39)
என்பதும் அப்பொருட்டாய்வரும்
 

சூ. 312 :

மழவும் குழவும் இளமைப் பொருள
(15)
 

உரை:மழ-குழ   என்னும்   குறிப்புரிச்  சொற்கள்  இளமை என்னும்
பொருட்குரியவாய் வரும்.
 

எ-டு : மழகளிறு   (புற-38)  எனவும்,  குழக்கன்று (புறம்-103) எனவும்
வரும். இவற்றின் அடியாக மழலை, குழவி என்னும் ஓரொருபெயரன்றிப் பிற
பெயர்   வினைகள்   பிறவாமையின்   எடுத்தோதினார்   என்க.   இவை
பெயரடையாக வரும். குழகன் குழமகன் என்பவை   இடைக்கால   வழக்கு.
மழவன் என்பது மழு என்னும் கருவிப்  பெயரடியாகப்  பிறந்தது.  மழபாடி
என்பது மழவர் பாடி என்பதன் மரூஉவாகும்.