சேர்தல், சேர்த்தல், வீழ்தல், வீழ்த்தல், போன்றவை இத்தகையன. இவை வினைப்போலியாக வந்த உரிச்சொற்கள் என அறிக. துணையிற்றீர்ந்த கடுங்கண்யானை என்பது பெயரெச்ச வினையாதலன்றி உரிச்சொல்லாகாமையான் இத்தகையன காட்டாதற்கு ஒவ்வா என்க. |
சூ. 320 : | கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு |
(23) |
உரை:கெடவரல், பண்ணை எனவரும் அவ்விரு குறிப்புரிச் சொற்களும் விளையாட்டு என்னும் பொருள் பற்றி வரும். |
எ-டு : "கெடவரலாயமொடு" எனவும் "பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்" எனவும் வரும். இவை தனித்துப் பெயர்ப்போலியாய் வரும். 'விளையாட்டு' என்றது அத்தொழிற்பண்பினைச் சுட்டி நின்றது. |
சூ. 321 : | தடவும் கயவும் நளியும் பெருமை |
(24) |
உரை:தட கய நளி என்னும் பண்புரிச் சொற்கள் பெருமை என்னும் பொருள்பற்றி வரும் (பெருமை - பெருக்கம்) |
எ-டு : வலிதுஞ்சு தடக்கை (புறம்-394) எனவும் கயவாய்ப் பெருங்கையானை (அகம்-118) எனவும் நளிமலை நாடன் நள்ளி (புறம்-150) எனவும் வரும். |
| சூ. 322 : | அவற்றுள் |
| தடவென் கிளவி கோட்டமும் செய்யும் |
(25) |
உரை:மேற்கூறிய மூன்றனுள் தட வென்னும் சொல் பெருமையாகிய பண்புணர்த்தலேயன்றி வளைவு என்னும் பண்புணர்த்தியும் வரும். எ-டு : தடமருப் பெருமை (நற்-160) எனவரும். |
சூ. 323 : | கயவென் கிளவி மென்மையும் செய்யும் |
(26) |
உரை:கயவென்னும் உரிச்சொல் பெருமையேயன்றி மென்மைப் பண்புணர்த்தியும் வரும். எ-டு: கயந்தலை மடப்பிடி (நற்-137) எனவரும். |
சூ. 324 : | நளியென் கிளவி செறிவு மாகும் |
(27) |
உரை:நளி என்னும் உரிச்சொல் பெருமைப்பண்பேயன்றிச் செறிவு என்னும் குறிப்புணர்த்தியும் வரும். எ-டு : நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி (புறம்-66) எனவரும். |