உரியியல்321

சூ. 335 :

வெம்மை வேண்டல்
(38)
 

உரை:வெம்மை   என்னும்   பண்புரிச்   சொல் வேண்டல் என்னும்
பொருள் குறித்து வரும். [வேண்டல் - விருப்பம்]
 

எ-டு : ஏமவெங்  காமம்  இயைவ தாயினும் (அகம் - 15) இது பெயர்ப்
போலியாய் வரும்.
 

சூ. 336 :

பொற்பே பொலிவு
(39)
 

உரை:பொற்பு   என்னும்   குறிப்புரிச்   சொல்  பொலிதல் என்னும்
பொருள்பற்றி  வரும்.  எ-டு :  பெருவரையடுக்கம்   பொற்பச்   சூர்மகள்
(அகம் - 15)   எனவரும்.   (பொலிவு - விளங்குதல்)     இது   வினைப்
போலியாய் வரும். அழகென்னும் பண்புப்   பெயராகிய   பொற்பு   வேறு
இவ்வுரிச்சொல் வேறு.
 

சூ. 337 :

வறிது சிறிதாகும்
(40)
 

உரை:வறிது   என்னும்   குறிப்புரிச்   சொல்     சிறிது   என்னும்
பொருட்காகி   வரும்.   எ-டு :    வறிதுவடக்     கிறைஞ்சிய   சீர்சால்
வெள்ளி (பதிற் - 14) எனவரும். இது பெயர்ப்போலியாய்த் தனித்து வரும்.
 

சூ. 338 :

ஏற்றம் நினைவும் துணிவு மாகும்
(41)
 

உரை:ஏற்றம் (ஏற்று)   என்னும்    குறிப்புரிச்  சொல்   நினைதலும்
துணிதலும் ஆகிய பொருள்கட்கு ஆகிவரும்.
 

எ-டு : கானலஞ்   சேர்ப்பன்   கொடுமை ஏற்றி (குறு - 145) எனவும்,
ஏற்றமி லாட்டி  என்ஏ   முற்றாள் (கலி - 144)   எனவும்   வரும்.   இது
வினைப்போலியாக வரும்.
 

சூ. 339 :

பிணையும் பேணும் பெட்பின் பொருள
(42)
 

உரை:பிணை   என்னும்   குறிப்புரிச்   சொல்லும்  பேணு என்னும்
குறிப்புரிச்     சொல்லும்     பெட்பு       என்னும்     சொல்லுக்குரிய
புறந்தருதல், விரும்புதல், என்னும் பொருளினவாய் வரும்.
 

எ-டு : "அரும்பினை   யகற்றி  வேட்ட ஞாட்பினும்" எனவும் "யானும்
பேணினல்லனோ    மகிழ்ந"  எனவும்  வரும்.      பிணை     என்னும்
வெளிப்படவாரா   உரிச்சொல்   உணர்த்துவர்  அப்பொருட்டாகிய பேண்
என்னும் வெளிப்படு சொல்லையும்  உடன்  ஓதினார்.   பிணை   என்பது
பெயர்ப்போலியாக வரும்.