322உரியியல்

சூ. 340 :

பணையே பிழைத்தல் பெருப்பு மாகும்
(43)
 

உரை:பணை       என்னும்       குறிப்புரிச்சொல்   பிழைத்தலும்
பெருத்தலுமாகிய  பொருள்கட்காகி  வரும்.   எ-டு : பணைத்து வீழ் பகழி
(நற்-165)   எனவும்   வேய்மருள்   பணைத்தோள்   (அகம்-1)   எனவும்
வரும். இது வினைப்போலியாய் வரும்.
 

சூ. 341 :

படரே உள்ளல் செலவு மாகும்
(44)
 

உரை:படர்   என்னும்   குறிப்புரிச்   சொல்  உள்ளுதலும் செலவும்
ஆகிய பொருள்கட்காகி  வரும்.   (உள்ளுதல்-ஊன்றி   நினைதல்) எ-டு :
வள்ளியோர்ப்   படர்ந்து   புள்ளிற்போகி,   (புறம்-47)   எனவும் கறவை
கன்றுவயிற் படர (குறு-108) எனவும் வரும்.  இதுவும்   வினைப்போலியாக
வரும்.
 

சூ. 342 :

பையுளும் சிறுமையும் நோயுன் பொருள
(45)
 

உரை:பையுள்-சிறுமை  என்னும்   குறிப்புரிச்   சொற்கள்  நோயின்
பொருளவாகிய துன்பம் வருத்தம் முதலிய பொருளினவாய் வரும்.
 

எ-டு : படர்சுமந்   தெழுதரும்   பையுள்   மாலை (குறு-195) எனவும்
மெல்லிய  நெஞ்சு பையுள்   கூர   (கலி-137)   எனவும்    சிறுமையுறுப
செய்பறியலரே (நற்-1)  எனவும்   நசைபழு   தாகப்  பெருங்கையற்றவென் சிறுமை   (நற்-222)    எனவும்   வரும்.   இவை   பெயர்ப்போலியாய்த்
தனித்து   வரும்.   சிறுமை   என்னும்   பண்புப் பெயர் வேறு. இவ்வுரிச்
சொல் வேறு.
 

சூ. 343 :

எய்யா மையே அறியா மையே
(46)
 

உரை:எய்யாமை   என்னும்   குறிப்புரிச் சொல் அறியாமை என்னும்
பொருள் குறித்துவரும்.
 

பெயர் வினைகட்கு முதனிலையாக வரும் 'எய்' என்னும் சொல் எய்தல்,
எய்தான், எய்த்தல், எய்த்தான் எனச்  செலுத்துதல்,  இளைத்தல்  என்னும்
பொருளில் வெளிப்படு சொல்லாக வரும்.  எய்வான்,  எய்யான்,  என விதி
மறை இரண்டன்கண்ணும் வரும்.
 

எய்யாமை என்னும் உரிச்சொல்   அவற்றினின்றும் பொருள் வேறுபட்டு
அறியாமை என்னும் பொருள்குறித்து வருதலின்  இதனை எடுத்தோதினார்.
இவ்வுரிச்சொல்  'எய்'   என்பது   முதனிலையாகப்   பிறந்ததே  எனினும்
அறிதல் என்னும்