உரியியல்325

சூ. 352 :

கழுமென் கிளவி மயக்கம் செய்யும்
(55)
 

உரை:கழும்  என்னும்   குறிப்புரிச்சொல்     மயங்குதல்   என்னும்
பொருள்பற்றி  வரும்.   மயக்கம் - கலப்பு.   எ-டு : கழுமிய  ஞாட்பினுள்
(களவழி - 11) எனவரும். இது வினைப்போலியாக வரும்.
 

சூ. 353 :

செழுமை வளனும் கொழுப்பு மாகும்
(56)
 

உரை:செழுமை  என்னும்  குறிப்புரிச்சொல் வளனும் கொழுப்புமாகிய
பொருள்கட்காகி வரும். வெளிப்படவாராத   கொழுப்பென்னும்   பொருள்
உணர்த்துவார்  வெளிப்படு  சொல்லாகிய   வளனும்    பாகுபாடு   கருதி
உடனோதினார்.
 

எ-டு : செழும்பல்  குன்றம்  எனவும்  செழுந்தடிதின்ற செந்நாயேற்றை
எனவும் வரும். இது வினைப்போலியாக வரும்.
 

சூ. 354 :

விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்
(57)
 

உரை:விழுமம் என்னும் குறிப்புரிச் சொல்  சீர்மை,  சிறப்பு, இடும்பை
என்னும் பொருள்பற்றி வரும்.
 

எ-டு : விழுமியோர்,   காண்டொறும்  செய்வர்  சிறப்பு  (நாலடி -159)
எனவும் வேற்றுமை இல்லா விழுத்திணைப்  பிறந்து  (புறம் - 27)  எனவும்
நின்னுறு விழுமம்  களைந்தோன்  (அகம் - 170)  எனவும்  வரும்.  இவை
தெரிநிலைவினைக்கு   முதனிலையாகாமல்  குறிப்புவினைபற்றி  வருதலின்
எடுத்தோதினார்.
  

சூ. 355 :

கருவி தொகுதி
(58)
 

உரை:கருவி என்னும்   குறிப்புரிச்சொல்   தொகுதி  குறித்து வரும்.
(தொகுதி = பல்பொருட் கூட்டம்)
 

எ-டு : கருவி  வானம்   கதழுறை   சிதறி (அகம்-4)   வான் என்றது
முகிலை. அது  மின்னு,   முழக்கு,   காற்று   ஆகியவற்றொடு   தொக்கு
நிற்குமாறுணர்க. இது பெயர்ப்போலியாய் வரும்.
 

சூ. 356 :

கமம் நிறைந்தியலும்
(59)
 

உரை:கமம்   என்னும்  குறிப்புரிச்சொல்   நிறைதற்   பொருட்டாய்
வரும்.   எ-டு :     கமஞ்சூல்     மாமழை     (அகம்-43)   எனவரும்.
இதுவினைப்போலியாய் வரும்.