சூ. 357 : | அரியே ஐம்மை |
(60) |
உரை:அரி என்னும் குறிப்புரிச்சொல் ஐம்மை என்னும் பொருள் பற்றிவரும். (ஐம்மை-நொய்ம்மை-அழகுமாம்) இதுவும் வினைப்போலியாய் அடையாக வரும். எ-டு : அரிமயிர்த்திரள் முன்கை (புறம்-11) எனவரும். |
சூ. 358 : | கவவு அகத்திடுமே |
(61) |
உரை:கவவு என்னும் குறிப்புரிச்சொல் அகத்திடுதலாகிய பொருள் பற்றி வரும். (அகத்திடுதல்-அகப்படுத்தி நிற்றல்) எ-டு : கழூஉவிளங் கா£ரம் கவைஇய மார்பே (புறம்-9) எனவரும். இது வினைப்போலியாய் வரும். |
| சூ. 359 : | துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் |
| இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர் |
(62) |
உரை:துவை(த்தல்) சிலை(த்தல்) இயம்(பல்) இரங்கு(அல்) என்னும் இசையுரிச் சொற்கள் நான்கும் ஓசையும் ஒலியும் ஆகிய இசை குறித்து வரும் உரிச்சொற்கள் எனக்கூறுவர் புலவர். |
எ-டு : முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும் (புறம் - 158) எனவும், ஆமா நல்லேறு சிலைப்ப (முருகு - 315) எனவும், கடிமனை இயம்ப (புறம் - 36) எனவும் ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம்பெறாஅன் (கலி - 46) எனவும் வரும். துவைத்தலும், சிலைத்தலுமாகிய வெளிப்பட வாராதனவற்றை உணர்த்துவார் பொருள் ஒத்து வருதல்பற்றி இயம்பலும் இரங்கலும் உடன் ஓதினார் என்க. இவை பெயர், வினைகட்கு முதனிலையாய் வரும். |
| சூ. 360 : | அவற்றுள் |
| இரங்கல் கழிந்த பொருட்டு மாகும் |
(63) |
உரை:மேற்கூறியவற்றுள் இரங்கல் என்பது கழிந்தநிலை உணர்த்துங் குறிப்புரிச்சொல்லாயும் வருதற்காகும். எ-டு : செய்திரங்காவினைச் சேண்விளங்கும் புகழ் (புறம்-10) எனவரும். |
சூ. 361 : | இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை |
(64) |
உரை:இலம்பாடு - ஒற்கம் என்னும் குறிப்புரிச்சொற்கள் இரண்டும் வறுமை என்னும் பொருள் குறித்து வரும். |