எ-டு : மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் (குறு - 87) எனவும் நாமநல்லராக் கதிர்பட உமிழ்ந்த எனவும் உருமில் சுற்றமொடு (பெரும்பாண் - 447) எனவும் வரும் "ஆமுறை" என்றதனான் பேம் என்பது மகரங்கெட்டு யகரமேற்றுப் பேய் எனப் பெயராக வருதலும் நாம் ன்பது நாம எனத் திரிந்து நிற்றலும் கொள்க, இவை பெயர்ப்போலியாக வரும். |
சூ. 367 : | வய வலியாகும் |
(70) |
உரை:வய என்னும் குறிப்புரிச்சொல் வலி என்னும் பொருட்டாய் வரும். எ-டு : துன்னருந் துப்பின் வயமான் (புறம்-44) எனவரும். |
சூ. 368 : | வாள் ஒளியாகும் |
(71) |
உரை:வாள் என்னும் பண்புரிச் சொல் ஒளி என்னும் பொருட்டாய் வரும். எ-டு : வாள்முகம் (புறம் - 6) எனவரும். |
சூ. 369 : | துயவென் கிளவி அறிவின் திரிபே |
(72) |
உரை:துய என்னும் குறிப்புரிச்சொல் அறிவு திரிந்தமையாகிய பொருள் குறித்துவரும். எ-டு : 'துயவுற்றேம் யாமாக' எனவரும். இவை மூன்றும் பெயர்ப்போலியாய் வரும். |
சூ. 370 : | உயாவே உயங்கல் |
(73) |
உரை:உயா என்னும் குறிப்புரிச்சொல் உயங்குதல் என்னும் பொருள்குறித்து வரும் (உயங்கல்-துயர்கூர்தல்) எ-டு : பருந்திருந்து உயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை (அகம்-19) எனவரும். |
சூ. 371 : | உசாவே சூழ்ச்சி |
(74) |
உரை:உசா என்னும் குறிப்புரிச்சொல் சூழ்தலாகிய பொருள் பற்றி வரும். எ-டு : உசாத்துணை (குறு-207) எனவரும். |
சூ. 372 : | வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம் |
(75) |
உரை : வயா என்னும் குறிப்புரிச்சொல் வேட்கைப் பெருக்கமாகிய பொருள் பற்றி வரும். எ-டு : வயவுறு மகளிர் (புறம்-20) வயா என்பது செய்யுள் விகாரமாய் 'வய' எனநின்றது. இவை மூன்றும் பெயர்ப் போலியாகவரும். |