330உரியியல்

உரை:நன என்னும் குறிப்புரிச் சொல் இடமாகிய களத்தையும் அகலப்
பரப்பினையும் உணர்த்தி வரும்.
 

எ-டு : நனவுப்புகு  விறலியிற்  றோன்றும்  நாடன் (அகம்-82) எனவும்
நனந்தலை லகம் எனவும் வரும். இது பெயர்ப்போலியாகத் தனித்து வரும்.
 

சூ. 378 :

மதவே மடனும் வலியு மாகும்
(81)
 

உரை:மத   என்னும்   குறிப்புரிச்   சொல்   மடனும்  வலியுமாகிய
பொருட்காகி வரும்.
 

எ-டு : பதவுமேய்ந்த  மதவுநடை   நல்லான் (அக-14) எனவும், கயிறிடு
கதச்சேப்  போல  மதமிக்கு   (அக-36)   எனவும்   வரும்.   மடப்பமும்
வன்மையுமாகிய   பண்புச்   சொற்கள்   வேறு.     இவை   மதர்த்தலும்
செருக்குமாகிய குறிப்பினவாம். இது  பெயரடையாகப்  பெயர்ப் போலியாக
வரும்.
 

சூ. 379 :

மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே 

(82)
 

உரை:மேற்கூறிய   'மத'   என்னும்  சொல் மிகுதியும் வனப்புமாகிய
பொருட்காகிவருதலும் உரியதாகும்.
 

(மிகுதி - ஊக்கம்.   வனப்பு - கதிர்ப்பு)   உம்மை   சிறுபான்மையை
உணர்த்தி நின்றது. அதனான் பிரித்துக் கூறினார்.   அஃது  இப்பொருளில்
வினைப்போலியாக வருதலின்  பிரித்துக்   கூறினார்  எனினுமாம். எ-டு :
'மதவிடை' எனவும், 'மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே' எனவும் வரும்.
 

சூ. 380 :

புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி

(83)
 

உரை:யாணர்என்னும்   குறிப்புரிச்   சொல்   புதிய நிலைமையினை
உணர்த்திவரும். இது பெயர்ப் போலியாகத்தனித்து வரும். எ-டு : மீனொடு
பெயரும் யாணர் ஊர (நற்-210) எனவரும்.
 

சூ. 381 :

அமர்தல் மேவல்
(84)
 

உரை : அமர்தல்   என்னும்   குறிப்புரிச்சொல் மேவுதலாகிய பொருள்
குறித்து வரும். மேவுதலாவது -  விரும்பிச்  சேறல்.   எ-டு : அகனமர்ந்து
செய்யாள் உறையும் (குறள்-84) இது வினைப்போலியாய்  வரும்.  இருத்தல்
என்னும் வெளிப்படு சொல்லாகிய அமர் என்னும்   தொழிற் பெயர் வேறு.
இது வேறு.