சூ. 382 : | யாணுக் கவினாம் |
(85) |
உரை:யாண் என்னும் குறிப்புரிச் சொல் கவின் என்னும் பொருட்காகி வரும். எ-டு : யாணது பசலை (நற்-50) எனவரும் . யாணு என்பதனுள் 'உகரம்' சாரியை. இது பெயர்ப்போலியாக வரும். |
சூ. 383 : | பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள |
(86) |
உரை:பரவுதல், பழிச்சுதல் என்னும் குறிப்புரிச் சொற்கள் வழுத்துதல் என்பதன் பொருளாகிய வழிபடுதல் என்னும் பொருளினவாம். |
எ-டு : நெல்லுகுத்துப் பரவும் கடவுளு மிலவே (புறம்-335) எனவும், கைதொழூஉப் பழிச்சி (மதுரை-194) எனவும் வரும். இது வெளிப்படு சொல்லாயினும் தொழிற்பெயர்ப் பொருளினின்று வேறுபட்டு வருதலின் எடுத்தோதினார். |
| சூ. 384 : | கடியென் கிளவி |
| வரைவே கூர்மை காப்பே புதுமை |
| விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே |
| அச்சம் முன்றேற்று ஆயீ ரைந்தும் |
| மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே |
(87) |
உரை:கடியென்னும் குறிப்புரிச்சொல் வரைவு முதலாகிய பத்துப் பொருளாகத் தோன்று பொருட்டன்மையுடையதாகும். |
எ-டு : கடிந்த கடிந்தாரார் செய்தார்க்கு (குறள்-658) வரைவு. கடிநுனைப் பகழி கூர்மை. கடிமரம் தடியுமோசை (புறம்-36) காப்பு. கடவுட் கிட்ட செழுங்குரல் (குறுந்-105) புதுமை. கடுந்தேர் குழித்த ஞெள்ளல் (புறம்-15) விரைவு. கடும்பகல் ஞாயிறு (கலி-145) விளக்கம். கடுங்கால் ஒற்றலின் (பதிற்றுப்-25) மிகுதி. கடு நட்பு. சிறப்பு. கடியையான் நெடுந்தகை செருவத்தானே அச்சம். கொடுஞ்சுழிப்புகார் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவள் நினைக்கே (அகம்-110) முன்றேற்று. முன்றேற்று - முன்னிலையாக வைத்துத் தெளிவித்தல். இவ்வுரிச்சொல் பெயர் வினைகட்கு முதனிலையாக வருங்கால் வெளிப்படு சொல்லாயினும் , ஏனை நிலைகளும் கூறுவாராய் உடன் ஓதினார். மெய் பெறத் தோன்றும் என்றதனான் கடிஎன்பது கடும் என (7-8) ஈறுதிரிதலும் கொள்க. கடி-கடித்தல் என்னும் தொழிற்பெயர் வேறு இதுவேறென அறிக. |