மூன்று  இயல்களிலும்,  பெயர்  வினை  இடை உரி என்ற தனிச்சொல்
நான்கனையும் பற்றிய செய்திகளை அடுத்த நான்கு இயல்களிலும் சொல்லுள்
எஞ்சியவற்றை  எச்சவியலிலும்  ஆசிரியர் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார்.
இவ்வுரையாசிரியர்    ஆராய்ச்சிக்குத்     தெய்வச்சிலையார்     ஓரளவு
வழிகாட்டுகிறார்.
 

"யாதானும் ஒரு சொல்லை  இருதிணை ஐம்பாலுள்  ஒன்றற்கு உரியதாக
ஆக்கிக்கொள்ளுதலும்,  செப்பும்  வினாவுமாக  வரும்  தொடர்மொழிகளை
வழுவின்றி  ஆக்கிக்  கொள்ளுதலும்,   இலக்கண   வரையறையிற்  சிறிது
பிறழ்ந்து  வரினும்  சான்றோர்   வழக்காய்ப்  பொருளுணர்ச்சி  திரியாமல்
மரபாக  வருவனவற்றை  மரபாக  மேற்கொள்ளுதலும் ஆக்கமாம்.-கிளவி :
தனிமொழி, தொகைமொழி, தொடர் மொழிகளுக்குப் பொதுவாக நின்றது.
 

வழுவை   நீக்கிக்   கொள்ளுதல்    ஆக்கம்     ஆகாது"    என்று
கிளவியாக்கத்துக்கு   விளக்கங்   கூறி   அதனை   அவ்வியல்  முழுதும்
பொருத்திக் காட்டுகிறார் - பக் (24, 25).
 

ஆவும்ஆயனும்  செல்க,   என்புழித்   திணை   விராய்   எண்ணுதல்
வழுவமைதி  எனின்,  இதற்கு  வழாநிலை  வடிவம்  யாது?  என்ற வினா
பொருட்  சிறப்புடையது  (பக்-70)   மக்கட்சுட்டு   என்பதன்   விளக்கம்.
(பக்-26)  பவணந்தியார் 'மக்கள் தேவர் நரகர் உயர்திணை' என்ற கூற்றின்
பொருத்தமின்மை (பக்-28, 29) அஃறிணையில் ஒன்று பல என்ற பாகுபாடே
கொண்டதன்  கருத்து   (பக்-31)   பேடன்   வந்தான்   என்ற   தொடர்
பொருந்தாதெனல் (பக்-33).
 

னஃகான்  ஒற்று  முதலியன ஆடூஉவறிசொல்  முதலியவற்றின்  ஆக்க
இலக்கணம்  கூறுதற்கே  எழுந்தன  என்பது (பக்-34, 35) பகர உயிர்மெய்
பலர்பாலையும்  வகர  உயிர்மெய்  பலவின்  பாலையும்  ஆக்க உதவுவன
எனல் (பக்-38)  'தம்மரபினவே'  என்ற  தொடரின்  விளக்கம் (பக்-41, 42)
தொடர்மொழியாக்கத்தின்கண் மயங்கல் கூடா என விதித்த திணை முதலிய
ஐந்தும்  'செப்பினும்  வினாவினும்  வழுவாமற்  போற்றுக'  என்று   கூறி
இவ்வியல்  முழுதும்  செப்பும்  வினாவுமாக  அமையும் தொடர் பற்றியதே
என்பதைச்  சுட்டுதல் (பக்-44), சுட்டு  முதலாகிய காரணக்கிளவி அதனால்
என்பதன்று 'அதனான்'  என்பதே - என்பது  பற்றிய  விரிவான விளக்கம்
(பக்-65)
 

"தன்மைச்  சொல்லே ............ வரையார்"  என்பது   பெயர்    பற்றிய
விதியாதலின்,  அது,  "பன்மையுரைக்கும்  தன்மைக்கிளவி ............ உளவே"
என்ற நூற்பாவில் அடங்காது எனல்