(பக்-68, 69)   வியங்கோள்   எண்ணுப்பெயர்   திணை   விரவி  வருதல்
வழாநிலையே எனல் (பக்-70)
 

"பெயரினும்   தொழிலினும் ............  பட்டன"    என்ற    நூற்பாவின்
பொருளுக்கு   எடுத்துக்காட்டுக்கள்   (பக்-73, 74)  "குறித்தோன்  கூற்றம்
தெரித்துமொழி கிளவி" என்ற நூற்பா உரை. கிளவி என்பதனைப் பிரயோக
விவேக நூலார் போன்று  வியங்கோளாகக்  கொள்ளுதல் (பக்-78) "குடிமை
யாண்மை"  "காலம்   உலகம்"  என்ற   நூற்பாக்கள்  நுவலும்   தொடர்
மொழியாக்கம் பற்றிய செய்திகள்.
 

வேற்றுமையியல்:-
 

கிளவியாக்கத்தின்  பின்  வேற்றுமையியல்  வைக்கப்பட்டதன் தொடர்பு
(பக்-87, 88)  பெயர்ப்பொருள்  எய்தும்  வேறுபாடே  வேற்றுமை  என்பது
(பக்-88, 89)  பெயர்  ஐ ஒடு கு முதலியன வேற்றுமைகளின் குறியீடு எனல்
(பக்-90, 91)  பெயர்  தோன்றும்  நிலை  என்பதன்   விளக்கம்   (பக்-92)
வியங்கொள  வருதல்  என்பதன் விளக்கம் (பக்-94) பெயரினாகிய தொகை
என்பதன்  விளக்கம்  (பக்-96)  "கூறிய முறையின் ............ என்ப" என்னும்
நூற்பாப் பொருள்  (பக்-99) 'பெயர்நிலைக் கிளவி' என்ற நூற்பாவின் பயன்
(பக்-100) அவ்விரு  முதல்  என்பதன்  விளக்கம்  (பக்-101,2) வினை முதற்
கிளவி   அனை   முதற்று    விளக்கம்   (பக்-104,5)   அதனொடியைந்த
ஒருவினை-வேறு  வினை விளக்கம்  (பக்-107, 8) இன் ஆன் ஏது விளக்கம்
(பக்-108)  உடனிகழ்ச்சிப்  பொருளும்  மூன்றாவதும்  (பக்-109)  ஒடு என்ற
சொல்   பல   பொருளில்  ஆளப்படுதல்   (பக்-110)   அதற்குடம்படுதல்,
அதற்குப்படுபொருள்  விளக்கம்  (பக்-113)  'இதனின்  இற்று இது' தொடர்
விளக்கம்  (பக்-114, 5)  ஐந்தாவதும்  ஏதுப்பொருளும்  (பக்-115) ஆது, அ
என்பன  ஆறன் உருபுகளே (பக்-119) ஏழன் பொருளாக நன்னூல் கூறுவது
பொருந்தாமை,  சேனாவரையரை  ஒட்டி  ஏழாவதன் பொருள் வகை கூறல்
(பக்-124, 5)  கண்ணுருபின்   பின்   கால்   புறம்   அகம்   முதலியவை
வாராமைக்குக்  காரணம்  (பக்-125) ஈற்று நின்றியலும் தொகை வேற்றுமைத்
தொகையே எனல் (பக்-128)
 

வேற்றுமை மயங்கியல்:-
 

உருபு  மயக்கம்   பொருள்  மயக்கம்  பற்றிய   விளக்கம்   (பக்-130)
"மூன்றனும்    ஐந்தனும்  ... ...  புலவர்"   பொருள்  விளக்கம்  (பக்-135)
"அவ்இரண்டன்  மருங்கின்  ஏதுவுமாகும்"  விளக்கம்  (பக்-137) இறுதியும்
இடையும் ............ வரையார்-நூற்பாச்செய்தி