இடையியல் | இடைச்சொல் பெயர் விளக்கம் (பக்-274) எற்று, மற்றை, எல், தஞ்சம், பொருள்விளக்கம் (பக்-285,87) பிரிவில் அசைநிலை (பக்-292) எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் மயங்கா என்பதன் விளக்கம் (பக்-294) ஏ கூற்றுவயின் ஓரளபாதல் உரைநடை வழக்கிற்கே எனல் (பக்-296) எனா, என்றா என்பன எண்ணுப்பொருளில் வருதற்குக் காரணம் (பக்-297) | உரியியல் | உரிச்சொல் பற்றிய விளக்கம் (பக்-303,7) வெளிப்படவாரா உரிச்சொல் என்பதன் கருத்து (பக்-310) எழுத்துப் பிரிந் திசைத்தல் (பக்-337,8) பொருட்குறைகூட்ட நிரம்புதல் (பக்-339) உரியியல் விளக்கம் யாவும் புதிய கோணத்தில் சிறப்பாக அமைந்துள்ளன. | எச்சவியல் | இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பவற்றின் விளக்கம் (பக்-341,8) வடசொற்கிளவி-சிதைந்தன பற்றிய இவர் கருத்து (பக்-349,50) சுண்ணம் பற்றிய எடுத்துக்காட்டு (பக்-355) பொருள்தெரி-அடிமறியான விளக்கமும் எடுத்துக்காட்டும் (பக்-357) பலசொல் தொடர்மொழி-தொகைமொழி வேறுபாடு (பக்-366) தொகை என்ற சொற்பொருளாராய்ச்சி (பக்-362,5) உம்மைத் தொகையை விரித்துக் காணும் திறன் (பக்-377) வெள்ளாடை முதலியன அன்மொழித்தொகையும் ஆகுபெயருமாதல் (பக்-379) உவமந் தொக்க பெயர்பற்றியும், வினை தொகவரூஉம் கிளவி பற்றியும் அன்மொழியும் ஆகுபெயரும் அமைதல் (பக்-380) 'இறப்பின் நிகழ்வின் முதலிய மூன்று நூற்பாக்களும் இருக்கவேண்டிய இடன்பற்றிய குறிப்பு (பக்-390) முற்று-எச்சம் பொருள்விளக்கம் (பக்-393) இசையெச்சம் குறிப்பெச்சம் இவை எனல் (பக்-401,2) எதிரதுதழீஇய எச்சவும்மை என்பதொன்று இன்று (பக்-399) பெயர்நிலைக் கிளவி-திசைநிலைக் கிளவி -மந்திரப்பொருள் வயின்ஆகுந விளக்கம் (பக்- 406, 408) இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே விளக்கம் (பக்-412,13). | மேற்குறிப்பிட்ட செய்திகள் இந்நூலிற் காணப்படுவனவாய்த் தொல்காப்பியச் சொற்படலத்தின் ஏனையோர் உரைகளில் பெரும்பாலும் காணப்படாத செய்திகளே. இவையாவும் தமிழ்ச் |
|
|