சான்றோர் எல்லோருக்கும் உடன்பாடான செய்திகளாக இருத்தல் வேண்டும் என்பது வற்புறுத்தப்படவில்லை. |
இவையேயன்றி இவ்வுரைகாரர் ஒருசில நூற்பாக்களில் சில திருத்தங்கள் செய்துள்ளார். சில நூற்பாக்கள் விடுபட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார். அவற்றை நிரலே காண்போம். |
சூ. 18:-
| இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்லாச் செய்யு ளாறே. |
|
சூ. 38:-
| சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவா இயற்பெயர் வழிய என்மனார் புலவர் |
|
சூ. 44:- | ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது |
|
சூ. 132:- | அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும் |
|
சூ. 183:-
| பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவர் என்னும் அன்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. |
|
சூ. 408:-
| அடிமறிச் செய்தி அடிநிலை திரியாது சீர்நிலை திரிந்து தடுமா றும்மே |
|
சூ. 409:-
| பொருள்தெரி மருங்கின் ஈற்றடி இருசீர் எருத்துவயின் திரிபும் தோற்றமும் வரையார் |
(தெய்வச்சிலையார் பாடமும் அன்று) |
|
சூ. 425:- | உரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும் |
|
சூ. 221:-
| ஆகிய, 'இன்றில உடைய' என்பதனையடுத்துப் பொருளும் இடமும் செய்கையும் பற்றி அஃறிணை வினைக்குறிப்பு வரும் என்னும் பொருள்பட அமைந்த நூற்பா ஒன்று இருந்து மறைந்திருத்தல் வேண்டும் (பக்-259) |
|
236ஆம் நூற்பாவையடுத்து; "பன்முறை யானும் பெயரெஞ்சு கிளவி சொன்முறை முடியாது அடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே" என்றொரு நூற்பா இருந்து மறைந்திருத்தல் வேண்டும். (பக்-237) |
இவையேயன்றித் தெய்வச்சிலையாரைப் பின்பற்றி 'வாரா மரபின' (சூ. 422) என்ற நூற்பாவையடுத்து "இசைநிறை அசைநிலை ... ... அடுக்கே" என்ற நூற்பாவை அமைத்துள்ளார். |