எ-டு:போர்க்களத்துக்கிடந்த கோட்டினைக்காட்டி இஃது அரசன் யானை எனவும் அதன் அடிச்சுவடுகளைக்காட்டி இஃது அரசயானை எனவும் கூறினும் பொருள்வேறுபடாது ஒன்றாகும் என்க. இம்மரபு 'அல்லதில்' என்னும் வாய்பாடு பற்றியதன்றாகலின் மிகையாற் கொள்ளப்பட்டதென உணர்க. |
| சூ. 38: | இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும் |
| வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின் |
| சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவா |
| இயற்பெயர் வழிய என்மனார் புலவர். |
(38) |
க-து: | தொடர்மொழி ஆக்கத்தின்கண் இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒருங்கியலும் வழி அவை நிற்கும் மரபு கூறுகின்றது. |
| |
உரை:இயற்பெயராகிய சொல்லும் சுட்டுப் பெயராகிய சொல்லும் பயனிலை கோடற்கு ஒரு பொருளின் கண்ணவாய் நடைபெறுங்காலந் தோன்றின், அத்தொடரின்கண் சுட்டுப்பெயர்கள் முற்படக்கிளக்கப்படா. இயற்பெயரின் வழியினவாம் எனக்கூறுவர் புலவர். |
ஈண்டு இயற்பெயரென்றது விரவுப்பெயரன்று. பொருளை உணரநிற்கும் குறியீடாகிய எல்லாப் பெயர்களையுமாம். அவற்றுள் சுட்டுப்பெயரை விதந்தமையின் அவை தவிர்ந்த ஏனை எல்லாப் பெயரும் கொள்ளப்படும். வினைக்கு ஒருங்கியலும் என்றதனான் அப்பெயர் வினை முதலாயும் ஏனை வேற்றுமையுற்றும் நிற்பன வெல்லாம் கொள்க. |
எ-டு:சாத்தனவன் வந்தான். சாத்தனவன் பெரியன். சாத்தனவன் கொடை எனவரும். இவை இயற்பெயரும் சுட்டுப் பெயரும் வினைமுதலாய் ஒருங்கியன்று ஒருபயனிலை கொண்டன. |
சாத்தன் வந்தான் அவன் உண்ணுவான். நம்பி வந்தான் அவன் பேசுவான். நங்கை வந்தாள் அவள் பாடுவாள். வீரர் வந்தனர் அவர் போரிடுவார். குதிரைவந்தது அஃது உணவுண்ணும். நாரைவந்தன அவை மீனருந்தும் எனவரும். இவை, இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒரு பொருளைச் சுட்டி வெவ்வேறு பயனிலை கொண்டன. |