சாத்தன் வந்தான் அவன் இனியன். பாண்டியன் வந்தான் அவன் வேந்தன். இவையும் அவ்வாறே வந்து வினைக் குறிப்பையும் பெயரையும் பயனிலையாகக் கொண்டன. சாத்தன் எழுந்தான் அவனை அழைத்திடுக. சாத்தனை எழுப்புக அவனுக்குச் சோறிடுக. நம்பியைப் போற்றுக அவன் அறிஞன். நங்கையை அழைக்க அவளுக்குப் பூவழங்குக. கொற்றனாற் செய்யத்தகும் அவன் அறிவுடையான். தேவருக்குப் பலிதருக அவர் மகிழ்வார். கொற்றனைக் கேட்க அவன்கண் இருக்கும். ஆசிரியரறவுரை அவரால் விளக்கப்பெறும். அரசர்கட்சார்ந்தால் அவர் புரப்பார் எனவரும். இவை ஏனை வேற்றுமைகளை ஏற்ற பெயர்களாய் ஒருங்கியன்று பயனிலை கொண்டன. |
இவ்வாறன்றிச் சுட்டுப்பெயர் முற்கிளக்கின் பொருள் ஒன்றாகாமல் வேறுபடும் என்க. |
உரையாசிரியன்மார் யாவரும் "முற்படக்கிளவார்" எனப் பாடங் கொண்டுள்ளனர். அஃது இயற்பெயர் வழிய என்பதனொடு இயையாமையும், 'கிளவார்', என்மனார் என்பவை பிறன்கோட்கூறல் போலநின்று மிகைப்படு தலையும் ஓர்க. அதனால் 'கிளவா' என்பதே நேரிய பாடமாதால் அறியலாம். |
இனி இச்சூத்திரவிதியான் பின்வரும் சுட்டுப்பெயர்களான் முன்னின்ற இயற்பெயர்கள் பொதுமை நீங்கி ஒரு திணைக்கு உரித்தாவதை ஓராமல் இயற்பெயராவது விரவுப் பெயரை என்று பொருள் கொள்வதும், 'இயற்பெயர் வழிய' என்னும் இன்றியமையாத தொடரின் செம்பொருள் காணாமல் அதனை மிகையாகக்கொண்டு அதனால் உயர்திணைப்பெயர் அஃறிணைப் பெயர்களை அடக்குதலும் சூத்திர நெறிக்கும் ஆசிரியர் கருத்துக்கும் ஒவ்வாஎன்பதனை ஓர்ந்துணர்க. |
சூ.39: | முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே |
[39] |
க-து: | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |
| |
உரை: இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினைக்கொருங்கு இயலு மிடத்துச் சுட்டுப் பெயரை முற்படக்கிளத்தல் செய்யுள் வழக்கிற்குரியதாகும். |
எ-டு:அவன்அணங்கு நோய்செய்தான் ஆயிழாய். வேலன் விறன் மிகுதார்ச் சேந்தன், பேர்வாழ்த்தி - முகனமர்ந்து அன்னை அலர்கடப்பந் தாரணியின் என்னைகொல் பின்னை யதன்கண் விளைவு எனவரும். |