கிளவியாக்கம்65

(சேந்தன் அவன் நோய் செய்தான். அன்னை வேலன்  பேர்  வாழ்த்தி
அணியின் என்னைகொல் விளைவு எனக்கூட்டுக. சேந்தன் - இயற்பெயர்)
 

ஆக்கமும் கேடும் அதனான் வருதலாற் 

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு 

எனவும் வரும்.
 
சூ. 40:

சுட்டு முதலாகிய காரணக் கிளவியும் 

சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும்
  

க-து: 
 

காரணத்தை உணர்த்தும் சுட்டுச்சொல் காரணப்  பொருட்குப்பின்
வருமென்கின்றது.

உரை: சுட்டெழுத்தினை    முதலாக    உடையதாய்க்    காரணத்தை
உணர்த்தும்   சொல்லும்   மேற்கூறிய   சுட்டுப்பெயர்போலச் சுட்டப்படும்
பொருளுக்குப் பின்னே வரும்.
 

எ-டு: சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனான் தந்தை   உவக்கும்.
கொற்றன் வெற்றி பெற்றான் அதனான் அரசன் உவக்கும் எனவரும்.
 

சுட்டு முதலாகிய காரணக்கிளவி என்றது அதனான், இதனான் எனவரும்
இடைச் சொற்களை 'அதனால்' என்னும்  சொல்லைச்   சுட்டு   முதலாகிய
காரணக்கிளவி என்பார்   உரையாளர்.   காரணப்   பொருட்டாக   வரும்
வேற்றுமையை உணர்த்தும் வழி "இன் ஆன் ஏது"  என   னகர   ஈற்றுச்
சொல்லையே ஆசிரியர் கூறினமை யானும். லகரஈறு வழாஅல் ஓம்பல் என
எதிர்மறை எச்சத்தின்  கண்ணும்   வியங்கோளின்   கண்ணும்   உண்பல்
காண்பல் எனப் பாலுணர வருதற்கண்ணும் தரல்  வரல்   எனத்   தொழிற்
பெயர்க்கண்ணும் வருதலன்றிக்  காரணப்   பொருட்டாய   சொல்லின்கண்
வாராமையானும் 'அதனால்' எனக்கொள்ளுதல்   பொருந்தாது.   அதனான்
இதனான் என னகர ஈறாகக் கொள்ளுதலே நேரிதென்க. இதனான் என்பது
பயின்று வாராது.
 

நால்வகைப்படையும்   ஆற்றலுடையன, ஒற்றரும் நிலையறிந்து கூறினர்,
குறுநில மன்னரும் துணை  நின்றனர்.   அதனான்   வேந்தன்   எளிதின்
வென்றான் என ஒன்றும் பலவுமாகிய