கிளவியாக்கம்67

இனித்     திருவீரவாசிரியன்,    மாந்தக்கொங்கேனாதி   எனவருவன,
'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்றாற்போலப் பல சொல்தொக்கு
ஒருபொருள் மேல்வந்த இயற்பெயர்எனக் கொள்க.
 

சூ. 42 :

ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி 

தொழில்வேறு கிளப்பின் ஒன்றிட னிலவே.  

[42]
 

க-து :

ஒருபொருளைச் சுட்டிநிற்கும்  பல்பெயர்த்தொகைப்பெயர்  வினை
முடிவு கொள்ளுமாறு கூறுகின்றது. 
 

உரை: ஒருபொருளைக் குறித்து நிற்கும் பலபெயர்   சொற்கள்   சொல்
தொறும் வேறுவேறு தொழில் முடிபாகக் கூறின்   அவை   ஒருபொருளாய்
ஒன்றுதல் இல.
 

எனவே   அவற்றைத்   தொகுத்துக்கூறினும்   பிரித்துக்கூறினும்   ஒரு
தொழிலாற் கிளக்க என்றவாறாம்.
 

எ-டு:ஆசிரியன் பேரூர்க்கிழான் இளங்கண்ணன்   சாத்தன்   வந்தான்
எனவரும். இது வேறு பெயர்க்கிளவிகள் தொக்கு   ஒரு   வினை   முடிபு
கொண்டது. ஆசிரியன் வந்தான் பேரூர்க்கிழான்  வந்தான்  இளங்கண்ணன்
சாத்தன் வந்தான், இவை பிரிந்து ஒரு வினையே  முடிபாகக்   கொண்டன.
இங்ஙனமின்றி ஆசிரியன் வந்தான்   பேரூர்க்கிழான்   உண்டான்   எனத்
தொழில் வேறு கிளப்பின் பொருள் ஒன்றென உணர்தற்கு அரிதாகும் என்க.
 

"ஒரு பொருள்" எனப்   பொதுப்படக்   கூறியிருப்பினும்   பெயரிட்டு
வழங்கப்படுவார் உயர்திணைக்குரிய மக்களே  யாதலின்  மக்கட்  பெயரும்,
உயர்திணை மருங்கின் பால்பிரிந்திசைக்கும்  தெய்வஞ்சுட்டிய   பெயருமே
கொள்ளப்படுமென்க.
 

பல பெயர்க்கிளவி என்னாது   வேறு   பெயர்க்கிளவி   என்றதனான்,
இருபெயர் முதலாக வருவனவும் பலசொற்களான் ஆகிய   தொடர்மொழிப்
பெயர்களாக வருவனவுமெல்லாம் மரபு நோக்கிக் கொள்ளப்படும்.
 

எ-டு:மருதன் இளநாகன் வந்தான். அதியமான்   நெடுமான்   அஞ்சி
வந்தான் எனவும் எந்தை வருக எம்மான் வருக மைந்தன் வருக மயிலோன்
வருக எனவும் மண்ணகம் புரக்கும்