மாறன் வாழ்க, பைந்தமிழ்ச்சங்கம் புரப்போன் வாழ்க. பற்றார்த் தேய்த்த பாண்டியன் வாழ்க எனவும் வரும். இஃது இருவகை வழக்கிற்கும் உரியதாய்ச் செப்பின்பாற் படுவதொரு மரபென்க. |
| சூ. 43: | தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று |
| எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார் |
(43) |
க-து: | உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விரவி ஒருமுடிபு கொள்ளுமாறு கூறுகின்றது. |
| |
உரை:தன்மைப் பெயர்ச்சொல்லும் அஃறிணைப்பெயர்ச் சொல்லும் எண்ணப்படுமிடத்தின்கண் விரவிவருதலை நீக்கார் ஆசிரியர். விரவுதல் என்றது விரவி ஒருமுடிபு கொள்ளுதலையாம். |
எ-டு: யானும் என் எஃகமும் சாறும் (சால்தும்) யானும் என் கிள்ளையும் உண்கும் (உண்பேம்) யாமும் எம் படையும் வெல்வேம், யாமும் எம்யானையும் வலியேம் எனவரும். |
இங்ஙனம் திணைவிராய் எண்ணுதற்கண் ஒன்றற்கு ஒன்று திணைவேறுபட்டுமயங்குமாயினும் எண்ணப்படுதற்கண் பிறிதாறு இன்மையின் இம்முடிபு வழாநிலையாய் மரபாயிற்றென்க. |
பின்னர்ப் "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின" (கிள-51) என்பார் ஆதலின் ஈண்டு இவை உயர்திணை முடிபு கொள்ளும் என்பது உய்த்துணரப்படும். தன்மைச்சொல் என்றமை யானும் விரவும் என்றதனானும் தன்மைப் பன்மைவினை என்பதும் கூறியவாறாம். |
இனி இச்சூத்திர உரைவிளக்கத்துள் "பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி, எண்ணியல் மருங்கின் திரிபவை உளவே" (வினை-12) என்பதனான் விராய்வந்து உயர்திணை முடிபு கோடலும் பெறப்படுதலின் இச்சூத்திரம் வேண்டா, எனின்? "உய்த்துணர்ந்து இடர்ப்படுவது எடுத்தோத்து இல்வழி என மறுக்க" என்பார் சேனாவரையர்.அது பொருந்தாவிளக்கமாம், என்னை? தன்மைப் பன்மை என்பது உளப்பாட்டுப்பன்மையேயாம். அங்ஙனம் உளப்படும் முன்னிலைப் பொருளும் படர்க்கைப் பொருளும் உயர்திணையாகவும் அமையும்; அஃறிணையாகவும் அமையும், அஃதாவது யானும்நீயும் அவன் குதிரையும் செல்வேம், |