சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

109

புள்ளியீற்றுள் இவை  கொள்ளும்  எனவே  ஒழிந்தன விளிகொள்ளா
என்பதூஉம் பெற்றாம்.

(எ - டு.) பொருந,  பாண   எனவும்  எல்லாரும்  எனவும்  இவை
முதலாயின விளி ஏலாதன எனக்கொள்க.                       (11)

புள்ளி யீற்றுள் விளிஏலாதன
 

132.

ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா.
 

என் -  எனின்,   வேண்டா    கூறி    வேண்டியது   முடித்தலை
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்  சொல்லப்பட்ட  நான்கும்   அல்லாத   புள்ளியீறு
உயர்திணையிடத்து விளித்தலைக் கொள்ளா, (எ - று.)

மற்று   இவ்விதி மேலே பெற்றாம் அன்றோ எனின், மேற் சொல்லிய
நான்கு புள்ளியீறும் இனிக் கூறுமாறு போலாது விளியேற்றலும் உடைய
என்றற்கு மிகைப்படக் கூறப்பட்டது எனக் கொள்க.

(எ - டு.) னகர  ஈற்றுள்   மேலோதுகின்ற   அன்னீறும்  ஆனீறும்
அல்லாத     னகர     வீறு      தம்முன்-தம்முன்னே      எனவும்,
நம்முன்-நம்முன்னே  எனவும்  விளியேற்றது.   ரகர ஈற்றுள்  ஓதுகின்ற
அர்ஈறும்  ஆரீறும்  அல்லாத  இர்  ஈறு  பெண்டிர்,  பெண்டீரே  என
ஏகாரம்  பெற்றும்  கேளிர்,  கேளீர்  என   இயல்பாயும்   விளிஏற்றது.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

இன்னும்      இம்மிகை     யானே    ஏனைய    புள்ளியுள்ளும்
சிறுபான்மையாவனவுள  1‘விளங்கு மணிக்கொடும்  பூண் ஆஅய்’  என
யகர   ஈறு  இயல்பாய்  விளி   ஏற்றது.  பிறவும்  வந்தவழிக்   கண்டு
கொள்க.                                                 (12)

னனகர ஈறு விளி ஏற்குமாறு
 

133.

அவற்றுள்
அன் என் இறுதி ஆவா கும்மே.
 

என்  -   எனின்,   மேல்   நிறுத்த   முறையானே,   னகர   ஈறு
விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.) அந்நான்கு  புள்ளியுள்ளும்  னகர  ஈற்று  அன் என்னும்
பெயரின் இறுதி ஆவாய் விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) சோழன் - சோழா, சேர்ப்பன் - சேர்ப்பா எனவரும்.  (13)


1. புறம் 130 : 1.