னகர ஈறு அண்மை விளியில் அகரமாதல் |
134. | அண்மைச் சொல்லிற் ககரம் ஆகும். |
என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தல் நுதலிற்று. (இ - ள்.) அவற்றுள் அன் ஈறு அணியாரை விளிக்குஞ் சொல்லிடத்து அகரமாகும், (எ - று.) (எ - டு.)சோழன் - சோழ, சேர்ப்பன் - சேர்ப்ப எனவரும். (14) ஆனென் இறுதி விளி யேற்குமாறு |
135. | ஆனென் இறுதி இயற்கை யாகும் |
என் - எனின், னகர ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு நுதலிற்று. (இ - ள்.) ஆன் என்னும் னகர இறுதிப் பெயர் இயல்பாய் விளியேற்கும், (எ - று.) (எ - டு.)சேரமான், மலையமான் எனவரும். (15) எய்தியது விலக்கிப் பிறிது விதி வருத்தல் |
136. | தொழிலிற் கூறும் ஆனென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. |
என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ - ள்.) ஒருவன் செய்யும் தொழில் ஏதுவாகக் கூறப்படுகின்ற ஆன் என்னிறுதிப்பெயர் விளியேற்கு மிடத்து ஆயாகும், (எ - று.) (எ - டு.)உண்டான் - உண்டாய். நின்றான் - நின்றாய் எனவரும்.(16) இதுவுமது |
137. | பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. |
என் - எனின், இதுவும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ - ள்.) அவற்றுள் பண்பு தனக்குப் பொருண்மையாக் கொண்ட பெயரும் மேற்கூறிய தொழிற்பெயரோடு ஒருதன்மைத்து, (எ - று.) (எ - டு.) கரியான் - கரியாய், செய்யான் - செய்யாய் எனவரும்: (17) |