சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

112

தான், யான்  என்பன  ஆனீறே  எனினும் விளியேலா எனக்கொள்க.
அவன்,  இவன்,   உவன்   என்னும்  சுட்டுப்பெயரும் யாவன் என்னும்
வினாப் பெயரும் அன்னீறே எனினும் விளிஏலா என்றவாறு.

மற்றுத்  தான்  என்பதன்றோ  எனின்,  விரவுப்  பெயர்களை  உயர்
திணைப் பெயர்களோடு மாட்டெறியும்  வழி விலக்கற்பாடு  மாட்டெறிதற்
கொப்பன இன்மையின் ஈண்டே கூறினார் என்பது.               (20)

ரகார ஈற்றுப்பெயர் விளி யேற்குமாறு
 

141.

ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.
 

என் -  எனின்,  நிறுத்த  முறையானே  ரகாரவீறு  விளியேற்குமாறு
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.) ஆர்  என்னும் ஈறும், அர் என்னும் ஈறும்,  ஈர் என்னும்
வாய்பாட்டோடு பொருந்தி விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) பார்ப்பார் - பார்ப்பீர், கூந்தர் - கூத்தீர் எனவரும்.   (21)

எய்தியதன்மேற் சிறப்பு விதி
 

142.

தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே.
 

என்  -  எனின்,  இஃது,  எய்தியதன்  மேல்  சிறப்புவிதி  வகுத்தல்
நுதலிற்று.

(இ - ள்.)  மேற்கூறிய   இரண்டு   ஈறும்    தொழிற்   பெயர்க்கு
ஈறாய்வரின் மேற்கூறிய  ஈரோடு  ஏகாரம் பெற்று வருதலும் குற்றமின்று
என்று சொல்லுவார் *விளங்கிய அறிவினையுடையார், (எ - று.)

(எ - டு.) உண்டார்  -  உண்டீரே,  தின்றார் - தின்றீரே எனவரும்.
அர் ஈறு வந்தவழிக் கண்டு கொள்க.

வழுக்கின்று என்றதனால், தொழிற்பெயரல்லனவும்  ஈரொடு  ஏகாரம்
பெறுதல் கொள்க.

(எ - டு.)நம்பீரே, கணியீரே எனவரும்.                    (22)

இதுவுமது
 

143.

பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.
 

என்  -  எனின், இதுவும்  எய்தியதன்மேல்  சிறப்பு  விதி வகுத்தல்
நுதலிற்று.