சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

113

(இ - ள்.) அவ்விரண்டு     ஈற்றுப்      பண்புகொள்    பெயரும்
அத்தொழிற்பெயரோடு ஒரு தன்மைத்து, (எ - று.)

(எ - டு.)  கரியீரே  ;  செய்யீரே  எனவரும்.   ஈண்டும்  ஆர்ஈறு
வந்தவழிக் கண்டுகொள்க.                                   (23)

எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
 

144.

அளபெடைப் பெயரே அளபெடை இயல.
 

என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.) ரகார    ஈற்று    அளபெடைப்பெயர்  1னகார   ஈற்று
அளபெடைப் பெயர்போல இயல்பாய் விளியேற்கும், (எ - று.)     (24)

(எ - டு.)மகாஅஅர், சிறாஅஅர் எனவரும்.

ரகார ஈற்றுப் பெயர்களுள் விளி ஏலாதன
 

145.

சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன.
 

என்  -   எனின்:   ரகார   ஈற்றுப்  பெயர்களுள்  விளி  ஏலாதன
கூறுகின்றது.

(இ - ள்.) ரகார ஈற்றுச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய பெயர்கள்
 2னகார ஈற்றுச் சுட்டுமுதற்பெயர் போல விளியேலாதாயிற்று, (எ - று.)
                                                        (25)

இதுவுமது
 

146.

நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்
றம்முறை இரண்டும் அவற்றியல் பியலும்.
 

என் - எனின், இதுவும் விளியேலாதன கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.)  நும்  என்னும் சொல்லினது  திரிபாகிய  நீயிர்  என்னும்
சொல்லும்,   வினாப்பொருளை   உணர  நின்ற   சொல்லாகிய  யாவர்
என்னும்  சொல்லும்   என்று  சொல்லப்பட்ட அம்  முறையினையுடைய
சொல்   இரண்டும்   மேல்   விளியேலாது   என்று    சொல்லப்பட்ட
சுட்டுப்பெயர் போலத் தாமும் விளியேலா, (எ - று.)

நீயிர்   என்பது  இர்  ஈறாகலின்,   ஈண்டு   எய்திய  தின்மையின்
விலக்கல்  வேண்டா  எனின்,  ‘ஏனைப்புள்ளி’  (132)  என்பதனுள் இர்
ஈறுங் கொள்ளப்பட்டமையின் வேண்டும் என்பது.                (26)


1.138 ஆம் நூற்பா. 2.140 ஆம் நூற்பா.