சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

115

என் - எனின்,  இதுவும்  எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
நுதலிற்று.

(இ - ள்.) ளகார   ஈற்றுப்பெயர் னகாரஈற்று  முறைப்பெயர் போல
 1ஏகாரம் பெற்று விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) மகள் - மகளே; மருமகள் - மருமகளே என வரும்.

மற்று  இதுவும்   விரவுப்பெயரன்றே   எனின்   2மேற்கூறியவாறே
கொள்க.                                                (30)

ளகார ஈற்றுள் விளி ஏலாதன
 

151.சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.
 

என் -  எனின்,  இஃது  ளகார ஈற்றுள் விளியேலாதன உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) ளகார  வீற்றுச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவள்,
இவள்,  உவள்   என்னும்   பெயர்களும்,   வினாப்பொருண்மையுடைய
யாவள் என்றும்  பெயரும்,  னகார ஈற்றுச்  சுட்டெழுத்து முதற்பெயரும்
வினாவின்  பெயரும்  போல   விளியேலா  என்று  சொல்லுவர் புலவர்
(எ - று.)                                                (31)

லகார ளகார ஈற்று அளபெடைப் பெயர்கள் விளி ஏற்குமாறு
 

152.

அளபெடைப் பெயரே அளபெடை இயல.
 

என் -  எனின்,  லகார ளகார ஈற்றுப் பெயர் இரண்டற்கும் எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.)3லகார  ஈற்று  அளபெடைப்  பெயரும் ளகார  ஈற்று
அளபெடைப்  பெயரும்  4னகார    ஈற்றுப்   பெயர்போல இயல்பாய்
விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) மாஅ அல், கோஒஒல் எனவரும்.

அதிகாரத்தான் இவ்விதிகளுள்  ளகாரஈற்று  விளியேலாதனவுங்  கூறி
இது கூறுகின்றமையின் அதிகார மாறிற்று என உணர்க்.           (32)

விரவுப்பெயர் விளி ஏற்குமாறு
 

153.

கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.
 

1.139 ஆம் நூற்பா.2.129 ஆம் நூற்பா உரை.

3.140 ஆம் நூற்பா.4.138 ஆம் நூற்பா.