சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

138

போல   உயர்திணைக்கே    உரித்தானது    முன்னிலைக்   கண்ணும்
படர்க்கைக்     கண்ணும்     விரவா    நிற்றலின்     ஈண்டேயோத
இன்னுழிவரவின்றி உயர்திணைப் பெயராம், (எ - று.)            (33)

நீயிர், நீ என்பன திணைதெரியாமை
 
  

191.

நீயிர் நீயென வரூஉம் கிளவி
பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள.
 

என் - எனின்,  நீயிர்   நீ   என்பனவற்றைத்  திணைக்குரித்தாமாறு
உணர்த்தல் நுதலிற்று.  

(இ - ள்.)  நீயிர்  எனவும்  நீ  எனவும்  வரூஉம் சொற்கள் திணை
தெரிபில,   உயர்திணையாயும்   அஃறிணையாயும்   உடனுணர்த்தலைப்
பொருண்மையாக வுடைய,  (எ - று.)  

மற்றுத்   திணை தெரியாமையின் அன்றே விரவுப் பெயராயது ; இது
சொல்லவேண்டுமோ  எனின்,   மேல்   விரவுப்  பெயர்களைத் “தத்தம்
வினையோடல்லது   பால்  தெரிபில”  என்றமையின், இயையும்.  தத்தம்
மரபின்     திணையான்     உணரற்பாடு    சென்றமைகண்டு   இவை
முன்னிலைப்  பெயராகலின்  இவற்றுக்கு  வரும் முன்னிலை  வினையும்
விரவாவாகலான் எய்தியது விலக்குதற்குக் கூறினார் என்பது.  

(இ - ள்.) நீயிர்  வந்தீர்,  நீ  வந்தாய்  என்பன  ;  திணை கண்டு
கொள்க.                                            (34) 

நீ என்பது ஒருமைக்குரித்தாதல்
 

192.

1அவற்றுள்,
நீஎன் கிளவி ஒருமைக் குரித்தே.
 

என் - எனின்,  நீ  என்னும்  சொல்  பாற்குரித்தாமாறு  உணர்த்தல்
நுதலிற்று.  

(இ - ள்.)  இவ்விரண்டனுள்ளும்  நீ  என்னும்  சொல்  இருதிணை
முன்னிலை ஒருமைக்குரித்தாம், (எ - று.)
  

(எ - டு.)நீ வந்தாய் என வரும்.  

இது இருபாற்கும் உரித்தாயவாறு கண்டுகொள்க. அஃறிணைக்கண்ணும்
பெண்  ஒருமைக்கண்ணும்  ஆண் ஒருமைக்கண்ணும் கொள்க,    (35)

நீயிர் என்பது பன்மைக் குரித்தாதல்
 
 

193.

ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே
 

1. இதனையும் அடுத்த  நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக்
கொள்வார் தெய்வச்சிலையார்.