இனி அம்மறை ஒருவாய் பாட்டதாய்ச்சொல் தன்னானே உண்டிலம் என்றாற்போல மறுத்து வருதலே அன்றி உண்டனம் அல்லம்..................வாய்பாட்டான் மறுத்து............. ஆம் :- உண்ணாநின்றாம், உண்டாம், உண்டிலாம், உண்கின்றாம், உண்ணாநின்றிலாம்; உண்பாம், உண்குவாம், உண்ணாம் என வரும். எம் :- உண்டெம், உண்டிலெம்; உண்ணாநின்றெம், உண்கின்றெம்; உண்ணாநின்றிலெம், உண்கின்றிலெம்; உண்பெம், உண்குவெம்; உண்ணெம் எனவரும். ஏம் :- உண்டனேம், உண்டிலேம்; உண்ணாநின்றேம், உண்கின்றேம்; உண்ணாநின்றிலேம்; உண்பேம், உண்குவேம், உண்ணேம் எனவரும். இவற்றிற்கும் உண்டாமல்லெம், உண்டாமல்லேம்.............விகற்பமும் அறிக. இனி, உம்மொடும் வரூஉங் கடதறக்கள் , உண்கும், உண்டும், வருதும், சேறும் என எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும் எனக் கொள்க. இவற்றுள் மறைவாய்பா........ந் நாற்கிளவியும் என்பான் எண்ணும் மையினைத் தொகுத்து ஒடு விரித்தார் எனக் கொள்க. (5) தன்மை ஒருமை வினைமுற்று |
என் - எனின், தனித்தன்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கடதற என்று சொல்லப்பட்ட அந்நான்கு ஒற்றினையும் ஊர்ந்த குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் நான்கும் என் ஏன் அல் என்னும் மூன்று ஈற்றுச்சொல்லும் எனச் சொல்ல வருகின்ற அவ்வேழு சொல்லும் தன்மைப் பன்மைச் சொல்போலச் சொல்லுவான் தன்னோடு பிறன் வினையையும் உணர்த்தாது தன் வினையையே உணர்த்தும் தன்மைச் சொல்லாம், (எ - று.) ஒடு, எண்ணொடு. இவற்றுள் முன்னைய நான்கும் எதிர்காலம் ஒன்றுமே பற்றிவரும். (இ - ள்.) உண்கு, உண்டு, வருது, சேறு, உரிஞுகு, திருமுகு என வரும். இவற்றுள் தகர உரகம்: “கழிந்து பொழிந்தென வான்கண் மாறினுந், தொல்லது விளைந்தென நிலம் வளங்கரப்பினும்” 1என்னும் புறப்
1. புறம். 203 |