சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

147

பாட்டினுள்  பொழிந்து   எனவும்,  விளைந்து   எனவும்   இறந்தகாலம்
பற்றி   வந்தன.  சிறுபான்மை  நிகழ்காலமும்   உண்டேனும்   அறிந்து
கொள்க.  

இனிக்     ககர   உகரத்திற்கு   :   “அழா  அற்கோ    வினியே
நோய்நொந்துறைவி”1   என்னும்   குறுந்தொகைப்  பாட்டினுள்  அழுது
என்னும்  உடன்பாட்டிற்கு  அழாஅற்கு  எனஎதிர்மறை  வந்தது. ஒழிந்த
எதிர்மறை வாய்பாடும் உளவேல் அறிக.  

இனி   என்   ஏன்   என்பன   இரண்டு   ஈறும்    முக்காலத்தும்
உடன்பாட்டினும் மறையினும் வரும் எனக் கண்டு கொள்க..  

(எ - டு.)   உண்டனென்,    உண்டிலென்;    உண்ணாநின்றனென்,
உண்கின்றனென்;   உண்ணாநின்றிலன்,  உண்கின்றிலன்;   உண்பென்,உ
உண்குவென், உண்ணலென் எனவரும். இவை என்.  

இனி     ஏன்  ;  உண்டேன்,   உண்டிலேன்;   உண்ணாநின்றேன்,
உண்கின்றேன்;    உண்ணாநின்றிலேன்,   உண்கின்றிலேன்;  உண்பேன்,
உண்குவேன், உண்ணேன் எனவரும்.  

உண்டனன்,  உண்டேனல்லேன்  எனவரும்  மறைவிகற்பமும் அறிக.

இவ்விரண்டீறும்   மூன்று காலத்தும் வருதலால் முன்  வைக்கற்பாற்று
எனின்,  முன்  சூத்திரத்து   கடதறக்கள் கடைக்கண்  நின்ற  அதிகாரம்
பற்றி அவற்றை முற்கூறினான் எனவு.........

அல்ஈறு     உண்பல், தின்பல்  எதிர்காலம்  ஒன்றுமே பற்றி வரும்.
உண்ணாநிற்பல்  எனச்   சிறுபான்மை   நிகழ்காலம்   பற்றியும்  வரும்.
ஒழிவல், தவிர்வல் எனச் சில வினைக்கண் மறைவாய்பாடும் அறிக.  

அல்லாதவற்றிற்கும்  உண்ணா   தொழிவல்    என்றா.........வாய்பாடு
தானே மறையாய்ச் சொல்லுமாறு அறிக.                        (6)

செய்கு என்னும் வினை வினையொடு முடிதல்
   

207.அவற்றுள்
செய்கென் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்.

 

என் - எனின்,    அவ்வேழனுள்    ககர   உகர  ஈற்றிற்கு  முடிபு
வேற்றுமை கூறுதல் நுதலிற்று.  

(இ - ள்.)  மேற்  சொல்லப்பட்ட  ஏழனுள்ளும்  செய்கு  என்னும்
சொல்  பெயரொடு  முடியாதே  வினையொடு   முடியினும்  பெயரோடு
முடிந்தன போல அம்முற்றுச் சொல்லாகல் இயல்பின் திரியாது, (எ - று.)


1.குறுந். 192