சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

157

கரியம்,     கரியாம்; கரியெம், கரியேம்; கரியென், கரியேன்; கரியன்,
கரியான்;  கரியள்,  கரியாள்;  கரியர்,  கரியார்  என  இவை    பண்பு
வந்தவாறு.  இவை  ஒழியச்  செம்மை முதலிய  பண்பொடும்  இவ்வாறு
ஒட்டுக, இவற்றின் விகற்பமும் அறிக.  

அல்லம்,    அல்லாம்; அல்லெம், அல்லேம்; அல்லென்,  அல்லேன்;
அல்லன்,  அல்லான்;  அல்லள்,  அல்லாள்;  அல்லர்,  அல்லார்  என
இவை  அன்மை  வந்தவாறு. இன்மை முதலியனவும்   இவ்வாறொட்டுக.
இவற்றின் விகற்பமும் அறிக.  

வன்மை   என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு வன்மையும்
வலிமையும்  ஆக்கி  வல்லம்  வலியம்    என  இருவாற்றானுமொட்டுக.
நல்லம்,   தீயம்,   சேயம்,   அணியம்   எனப்    பிற   பண்போடும்
எல்லாவீற்றையும் ஒட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக.  

ஓராட்டையம்,     ஒரு திங்களம், ஒரு நாளம் என  எல்லாத் காலத்
தோடும்  எல்லா  ஈற்றோடும்  ஒட்டுக.  ஊணம்,   தீனம்,  செலவினம்,
வரவினம் என  எல்லாவற்றோடும், எல்லா ஈற்றோடும் ஒட்டுக, முடவன்,
குருடன்,  செவிடன்  என  எல்லாச் சினையோடும்  எல்லா  வீற்றையும்
ஒட்டுக. இவற்றின் வாய்பாட்டு விகற்பமும் அறிக.  

உடைமைப்  பெயரும், பண்புப்  பெயரும், காலப் பெயரும், தொழிற்
பெயரும், சினைப் பெயரும் வந்தவாறு.                        (17)

அஃறிணைப்பன்மைத் தெரிநிலை வினைமுற்று
 

218.

அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை.
 

என் - எனின்,   நிறுத்த   முறையானே   உயர்திணை  வினையும்
வினைக்   குறிப்புக்    உணர்த்தி   அஃறிணை  வினை  உணர்த்துதல்
நுதலிற்று.  

அஃறிணை     வினைதான் ஒருமை வினையும்  பன்மை  வினையும்
என   இரு   வகைத்து;   அவற்றுள்   பன்மைவினை     உணர்த்திய
தொடங்கினார் என்பது.  

ஒருமையன்றோ     முன்னையதெனின்,    யாண்டும்   ஒருமையை
முன்கூறின்    அதற்கோர்   சிறப்புண்டுகொல்   என்பதுபடும்  என்று
முந்துமொழிந்ததன்   தலைதடுமாற்று   என்பதோர்     தந்திரவுத்தியும்
உண்டாதலான் இவ்வாறு கூறினான் என்க.  

(இ - ள்.) அ, ஆ, வ என்று  சொல்ல  வருகின்ற ஈறுகளை யுடைய
அக்கூற்று  மூன்று   சொல்லும்   பலவற்றை  உணர்த்தும்  படர்க்கைச்
சொல்லாம், (எ - று.)