(எ - டு.) உண்டன, உண்டில, உண்ணாநின்றன, உண்ணாநின்றில, உண்கின்றன, உண்கின்றில, உண்பன, உண்ணல, என அகரம் வந்தவாறு. இவ்வகரம் வருங்கால் உடன்பாட்டின்கண் னகர ஒற்றோடு கூடியும், மறைக்கண் லகர ஒற்றோடு கூடியும் அல்லது வாராதுபோலும். உண்ட, தின்ற, வந்த, போய என வருமால் எனின், அவை எல்லாக் காலங்களிலும் வராமையான் அந்நிகரனவற்றின் னகரம் செய்யுள் விகாரத்தால் குறைந்தது என்க. உண்ணா, தின்னா என ஆகாரம் வந்தவாறு. இதற்கு உடம்பாடு, எக்காலத்தும் இல்லையெனக் கொள்க. இதற்கு எதிர்காலமே உள்ளது, இதற்கு மறை உண்ணல என அகரத்தின் மறை எனக் கொள்க. உண்டன அல்ல, உண்டன இல்லை எனப் பிறவாய்பாட்டு மறையும் அறிக. (18) அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று |
என் - எனின், ஒருமைப் படர்க்கையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒன்றனை உணர்த்தும் படர்க்கைச்சொல் தறடக்களை ஊர்ந்த குற்றியலுகரமாகிய ஈற்றெழுத்தினையுடைய சொற்களாம், (எ - று.) (எ - டு.) வந்தது, வந்திலது, வாராநின்றது , வாராநின்றிலது; வருகின்றது, வருகின்றிலது; வருவது, வாராது எனத் தகரம் வந்தவாறு. கூறிற்று, தாயிற்று என றகரம் இறந்த காலம்பற்றி வந்தவாறு. இது உண்டல், தின்றல் என்னும் எல்லாத்தொழிலொடும் ஓடாமையும் அறிக. தனக்கு என ஏற்ற மறையின்மையும் அறிக. குண்டுகட்டு கொடுந்தாட்டு என்பன டகரம். இது வினைக் குறிப்பின்கண் வருவ தெனக் கொள்க. மற்று இது வினைக்குறிப்பு ஓதும்வழி ஓதாதது என்னை எனின், மேல் குறிப்பினைத் தெரிநிலை வினையினோடு மாட்டெறியுமாகலான் இத்தெரிநிலையுள் அடங்கா உகரமில்லது கண்டு, ஆண்டு மாட்டேலாது என ஈண்டே கூறினாரென வுணர்க. இவ்வாறு பன்மையும் ஒருமையும் அறிவிக்கும் ஈறுகள் கிளவியாக்கத் துள்ளே ஓதினார் அன்றோ எனின், ஆண்டு இடவரையறையின்மையின்
1. இளம்பூரணர் உரையில் ‘தடற’ என்ற பாடம் உள்ளது. சில ஏடுகளில் கல்லாடர்க்கும் இதுவே பாடமாகக் காணப்படுகின்றது. |