சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

160

தெரிநிலைவினை     யீறுகளே    குறிப்பிற்கும்  ஈறாம்     என்று
மாட்டேற்றுதற்கேலாதால்   எனின்,  அவ்வாறு  ஏலாமையினன்றே இது
வேறு   கூறியது   என்க.  இதனோடு  அஃறிணை   ஈறு  ஏழென்பது
பெற்றாம்.  

இவ்வாறு     னகரம்  அஃறிணைப்பான்மேல்   நிற்றலான் “னஃகா
னொற்றே  ஆடூஉ  வறிசொல்”  என்றவழிப் படர்க்கையிடத்து  முற்றுச்
சொற்கு  ஈறாயவழித் திரிபின்றியுணர்த்தும் என்ற  ரகாரம்  யாரென்னும்
வினாவின்கண்   ஒருமைக்கும்    உரித்தாய்    நின்றதன்றோ  எனின்,
அவையா கின்றவாறறிந்தது.                                (21)  

அஃறிணை வினைக்குறிப்பு
 
  

222.

1இன்றில உடைய என்னும் கிளவியும்
அன்றுடைத் தல்ல என்னும் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உளஎன் கிளவியும்
பண்பி னாகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும்.
 

என் - எனின், அஃறிணை வினைக்குறிப்புணர்த்துதல் நுதலிற்று.  

(இ - ள்.) இன்று,  இல  உடைய  என்னும்  சொற்களும்,  அன்று
உடைத்து  அல்ல   என்னும்  சொற்களும்,  நிறப்பண்புப்  பெயரினைத்
தனக்கடியாகக்  கொண்ட  சொல்லும், உள என் சொல்லும், நிறப்பண்பும்
குணப்பண்பும்  எனப்பட்ட  இருவகைப்  பண்புப்  பெயரும் காரணமாக
உளதாகிய   அப்பண்டைந்த    சினையொடு    முதலை   உணர்த்தும்
சொல்லும்,   உவமப்பெயரைத்   தனக்கு   அடியாகக்   கொண்டுவரும்
சொல்லலொடு  தொக்க  அக்கூற்றுப் பத்துச் சொல்லும் காலங் குறித்துக்
கோடலொடு வரும் வினைச்சொல் லாகக் கொள்ளப்படும், (எ - று.)  

(எ - டு.) இன்று :- இவ்வெருது கோடின்று.

கோட்டினது  இன்மை முதற்கு ஏற்றிக் கூறும் வழி இவ்வாறாய், இனி
அக்கோடு  தனக்கே இன்மை கூறும்  வழி  இவ்வெருதிற்குக் கோடின்று
என ஒரு பொருள் முதற் கூறியானும், இவ்விடத்துக்  


1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகச்
கொள்வர் இளம்பூரணர்.