சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

161

கோடின்று  என   ஓரிடம்  கூறியானும்,  இக்காலத்துக்  கோடின்று என
ஒரு காலம் கூறியானும் வரும்.  

உடைய :- இவ்வெருதுகள் கோடுடைய.  

அன்று :- நாய் அன்று நரி.  

உடைத்து :- இவ்வெருது கோடுடைத்து.  

பண்புகொள்  கிளவி :- செய்து,    செய்ய.    இது   பொதுவாக
ஓதினாராதலின்   எல்லா  நிறப்   பண்பினோடும் ஒருமை பன்மைப்பட
ஒட்டிக் கொள்க.  

உய :- உழுந்துளவெனக்  குறிப்புணர்த்தியும்  வரும்.  

பண்பினாகிய      சினைமுதற்கிளவி :-      குறுங்கோட்டது,
குறுங்கோட்டன: வெண்கோட்டது,  வெண்கோட்டன  என  இருவகைப்
பண்பும்  பற்றி வரும்.  

ஒப்பொடு வரூஉங் கிளவி :- பொன்னன்னது      பொன்னன்ன
எனவரும்.  

(உடைமைப்     பொருட்பெயர்  முதலாய்  அறுவகைப்  பெயரினும்
உடைமைப்  பொருட்பெயர்  ...  ...  .... ... ... ... என்ற  வாய் பாட்டால்
கொள்ளப்பட்டது.)     அவ்வுடைமைதான்   தற்கிழமையும்    பிறிதின்
கிழமையும்     என்னும்    இருவகையினும்    வரும்.    இப்பொழுது
மணியுடைத்து எனப் பிறிதின்கிழமை வந்தவாறு.

இனி     உண்டு  உள  என்றும், இன்று இல என்றும் ஒரு பொருள்
தனது உண்மையும்  இன்மையும் கூறும்வழி  அன்றி,  அப்பொருளினைப்
பிறிதொரு  பொருட்கண்   உண்மையும்   இன்மையுங் கூறிய வழி அது
உடைமையாய்  விடுமாகலால்  இவற்றானும் உடைமைப்  பொருள் பற்றி
வருதல் கூறப்பட்டதாம்.  

பண்புப்பெயருள் நிறப்பண்பு  பற்றி வருதல் ‘பண்புகொள் கிளவியும்’
என்றதனால் பெறப்பட்டது.  

இனிக்    குணப்பண்புப் பெயர் அன்று அல்ல என்பவற்றானும், ஒரு
பொருள் தனது உண்மையும்  இன்மையும் உணர்த்திவரும் உண்டு  உள
இன்று இல என்பனவற்றானங் கொள்ளப்பட்டது.  

உள     என்று   பன்மை   வாய்பாடோதிய   வதனால்    அதன்
ஒருமையாகிய     உண்டு     என்பதனையும்   தன்னின   முடித்தல்
என்பதனால் கொள்க.  

நன்று,     தீது,  சேய்த்து,  அணித்து  என்னும்  பிற   பண்புகளை
‘இன்றில’   என   வேறோதிய  வாற்றானே   ‘ஒன்றென   முடித்தல்’
என்பதனால்   கொள்க.   இவற்றுள்  உண்டு   உள   என்பவற்றிற்கும்,
உடைத்து   உடைய   என்பவற்றிற்கும்,  இன்று  இல   என்பனவற்றை
எதிர்மறையாகக் கொள்க.