சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

15

வென்றும் பகுத்து இவ்வாறு ஒன்றனையும் பற்றாது  வருவதனை மரபென
ஒன்றாக்கி இலக்கணமும் வழுவுங் கூறினாரென்பது.

அவற்றுள்     திணைவழூஉ   :     உயர்திணைப்பால்    மூன்றும்
அஃறிணைப்பால்     இரண்டனோடு     மயங்கி    உயர்திணைவழூஉ
மூவிரண்டாறாம்  ;  இனி  அஃறிணைப்பாலிரண்டும்  உயர்திணைப்பால்
மூன்றனோடு  மயங்கி  அஃறிணைத்திணைவழூஉ   இருமூன்று  ஆறாம்.
இவை   பெயர்   வினையென்னும்  இரண்டனோடு   உறழ   இருபத்து
நான்காம்.

(எ - டு.) அவன்  வந்தது,  அவன்  வந்தன  என்றாற்  போல்வன
பெயர்பற்றிய   உயர்திணைத்   திணைவழூஉ.  அது   வந்தான்,   அது
வந்தாள், அது வந்தார் என்றாற் போல்வன  பெயர்பற்றிய  அஃறிணைத்
திணைவழூஉ. இனி வந்தான் அது, வந்தான்  அவை  என்றாற்போல்வன
வினைபற்றிய அஃறிணைத் திணைவழூஉ.

இனிப்பெயரொடு பெயர்பற்றிய  திணைவழூஉ,  வினையொடு  வினை
பற்றிய திணைவழூஉ என விகற்பிக்கப் பலவுமாம்.

(எ - டு.) அவன்   அது,   அவன்   அவை  என்றாற்  போல்வன
பெயரொடு பெயர்பற்றிய திணைவழூஉ  உண்டான், தின்றான்,  ஓடினான்
சாத்தன்   என   ஒருவன்  மேற்பலவினை   கூறுகின்றுழி   உண்டான்
தின்றான்   ஓடினான்   பாடினான்   என்றாற்போல்வன   வினையொடு
வினைபற்றிய திணைவழூஉ.

இனிப்      பால்வழூஉ   :    உயர்திணைப்பால்    மூன்றும்ஒன்று
இரண்டனோடு   மயங்கி   மூவிரண்டாறாம்.  அஃறிணைப் பாலிரண்டும்
ஒன்றனோடு   ஒன்று   மயங்கி   ஓரிரண்டாயின.   ஆகப்  பால்வழூஉ
எட்டுவகைப்படும். அவை  வினை பெயர்  என்னும்  இரண்டனோடுறழப்
பதினாறாம்.

(எ - டு.)  அவன்    உண்டாள்,   அவன்   உண்டார்   என்பன
உயர்திணைப்  பெயர்பற்றிய  பால்வழூஉ.  அது வந்தன, அவை வந்தது
என்பன  அஃறிணைப்  பெயர் பற்றிய பால்வழூஉ.  உண்டான்  அவள்,
உண்டான்  அவர்  என்பன  உயர்திணை   வினைபற்றிய   பால்வழூஉ.
வந்தது  அவை,  வந்தன  அது   என்பன   அஃறிணை  வினைபற்றிய
பால்வழூஉ.

இனிப்  பெயரோடு   பெயரும்   வினையொடு   வினையும்  பற்றிய
வழுவாவனவும் உள.

(எ - டு.) அவன்  யாவள்,  அது  யாவை  என  இவை பெயரொடு
பெயர் பற்றிய பால்வழூஉ. உண்டான், தின்றாள்,  ஓடினான்,  பாடினாள்,
சாத்தன்  எனவும்,  உண்டது,  தின்றன,  வந்தது,   கிடந்தன  ஓரெருது
எனவும் இவை வினையொடு வினை பற்றிய பால்வழூஉ.

இனி  இடவழூஉ  : தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றும்
ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டாறாம்.